உருளைக்கிழங்கில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. இதை உயிர்காக்கும் உணவாக கருதுகிறார்கள். ஏனெனில் விட்டமின் சி ஸ்கர்வி என்னும் நோயை போக்கக் கூடியதாக இருந்தது. அடுத்தப்படியாக பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகமான அளவில் உள்ளது. இதயம், எலும்பு, நரம்புகள் இயங்குவதற்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டெட்டோ பைட்ஸ்
தேவையான பொருட்கள்;
உருளை-4
அரிசி மாவு-1 தேக்கரண்டி.
சோளமாவு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சில்லி பிளேக்ஸ்- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு1 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ் சிறிதளவு தூவி மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது சிறு சிறு துண்டுகளாக மாவை வெட்டி அதன் மீது போர்க் வைத்து அழுத்தி டிசைன் செய்து கொள்ளவும். இப்போது செய்து வைத்திருப்பதை சூடான எணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது சுவையான பொட்டெட்டோ பைட்ஸ் தயார் இதை தக்காளி சாஸூடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிப்பியை வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.
சூப்பர் டேஸ்டியான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு-4
சோளமாவு-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
சில்லி பிளேக்ஸ்- 1 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் வேகவைத்து தோலுரித்த 4 உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும். இதுல ½ தேக்கரண்டி உப்பு, சில்லி பிளேக்ஸ் 1 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும். இப்போ ஒரு சின்ன கிண்ணத்தில் சோளமாவு1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது சிறிது உருளைகிழங்கை எடுத்து தட்டி அதன் நடுவிலே மோசிரெல்லா சீஸ்ஸை வைத்து மூடி உருண்டையாக்கிக் கொள்ளவும். செய்து வைத்திருக்கும் சோளமாவு தண்ணீரில் நன்றாக முக்கி எடுத்து பிரெட்கிராம்ஸில் உருட்டை சூடான எண்ணெய்யில் போட்டு கோல்டன் பிரவுன் ஆகும் அளவிற்கு நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.