
இன்றைக்கு அல்டிமேட் சுவையில் கொய்யாப்பழ அல்வா மற்றும் பாசந்தி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கொய்யாப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
கொய்யாப்பழம்-8
நெய்-3 தேக்கரண்டி.
சர்க்கரை-1கப்.
குங்குமப்பூ-சிறிதளவு.
வெள்ளேரி விதை-தேவையான அளவு.
கொய்யாப்பழ அல்வா செய்முறை விளக்கம்;
முதலில் 8 கொய்யாப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கொய்யாப்பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை அப்படியே ஃபேனில் மாற்றிவிட்டு 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்ட பிறகு அடுப்பை ஆன் செய்யவும். நன்றாக வழவழப்பாக வந்ததும் நிறத்திற்கு சிறிது குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு மூன்று தேக்கரண்டி நெய்விட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும். கடைசியாக வெள்ளரி விதைகளை தூவி சுவையான கொய்யாப்பழ அல்வாவை பரிமாறவும்.
தினமும் ஒரு கொய்யாப்பழ சாப்பிடுவதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும், இது சரும பளபளப்பிற்கு மிகவும் நல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். எனவே, நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.
பாசந்தி செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1 லிட்டர்.
குங்குமப்பூ-சிறிதளவு.
சர்க்கரை-4 தேக்கரண்டி.
பாதாம்-10.
முந்திரி-10.
ஏலக்காய்-2.
பாசந்தி செய்முறை விளக்கம்;
முதலில் அடிகணமான ஃபேனில் 1 லிட்டர் பாலை நன்றாக சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். இப்போது இதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக ஆடை வந்ததும் 4 தேக்கரண்டி சர்க்கரை, பொடியாக நறுக்கிய பாதாம் 10, முந்திரி 10, ஏலக்காய் 2 சேர்த்து கொதிக்க விட்டு பால் திக்காக வந்ததும் அதை ஒரு பவுலில் ஊற்றி சூடு ஆறியதும் பிரிட்ஜ்ஜில் அரை மணிநேரம் வைத்து பிறகு எடுத்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான பாசந்தி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.