
இன்றைக்கு சுவையான உப்பு உருண்டை மற்றும் பொரியரிசி உருண்டை ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
உப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு- 4 தேக்கரண்டி.
முந்திரி-10
பச்சை மிளகாய்-2
காய்ந்த மிளகாய்-2
வெங்காயம்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
துருவிய தேங்காய்-1 கப்.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
அரிசி மாவு-1 கப்.
உப்பு-சிறிதளவு.
உப்பு உருண்டை செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 4 தேக்கரண்டி, முந்திரி 10, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்.
இப்போது ஒரு பவுலில் அரிசி மாவு 1 கப், உப்பு சிறிதளவு சேர்த்து சுடுதண்ணீர் விட்டு சப்பாத்தி பதத்திற்கு மாவை பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் நாம் செய்து வைத்திருக்கும் தாளிப்பை சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இப்போது இதை அப்படியே இட்லி பாத்திரத்தில் அடுக்கி 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான உப்பு உருண்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பொரியரிசி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்.
அரிசி -1 டம்ளர்.
தண்ணீர்-2 கப்.
உப்பு-சிறிதளவு.
நாட்டுச்சர்க்கரை-1கப்.
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-தேவையான அளவு.
பொரியரிசி உருண்டை செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 1 டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசி மவை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் ஏலக்காய் பொடி 2 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
இப்போது இது ஆறியதும் உருண்டைகள் உருட்டி துருவிய தேங்காயில் இந்த உருண்டைகளை போட்டு பிரட்டி எடுத்தால் அல்டிமேட் சுவையில் பொரி அரிசி உருண்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.