Gulab Jamun Milkshake
Gulab Jamun Milkshake and Nungu MoorImage Credits: Youtube

சம்மருக்கு கூலா குலாப் ஜாமூன் மில்க் ஷேக் மற்றும் நுங்கு மோர் செய்யலாம் வாங்க!

ன்னைக்கு குலாப் ஜாமூன் மற்றும் நுங்கு வைச்சுதான் சம்மர் டிரிங் செய்யப்போறோம். ரெண்டுமே சூப்பர் டேஸ்டாக இருக்கும். சரி வாங்க, இந்த டிரிங்கை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

குலாப் ஜாமூன் மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

குலாப் ஜாமூன்-3

பால்-2கப்

ஐஸ்- தேவையான அளவு.

குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம்-1 கப்.

குலாப் ஜாமூன் மில்க் ஷேக் செய்முறை விளக்கம்:

முதலில் குலாப் ஜாமூன் 3 எடுத்து நல்லா நசுக்கி எடுத்து கொள்ளவும். இப்போது அதை மிக்ஸியில் போட்டு விட்டு அத்துடன் குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம் 1கப் சேர்த்து பால் 2 கப் சேர்த்து அத்துடன் குலாப் ஜாமூன் சிரப் சிறிது சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது இதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி தேவையான அளவு ஐஸ் சேர்த்து மேலே குலாப் ஜாமூனை தூவி ஜில்லுன்னு பரிமாறவும். குலாப் ஜாமூன் மில்க் ஷேக் செமையாயிருக்கும். நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

நுங்கு மோர் செய்ய தேவையான பொருட்கள்:

கெட்டி தயிர்-1கப்.

நுங்கு-5

கொத்தமல்லி- சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

புதினா-சிறிதளவு.

பச்சை மிளாகாய்-2

இஞ்சி-1 துண்டு.

சீரக தூள்-1தேக்கரண்டி.

டிரை மேங்கோ பவுடர்-1 தேக்கரண்டி.

சாட் மசாலா-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

ஐஸ் கட்டிகள்- தேவையான அளவு.

நுங்கு மோர் செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது நுங்கு 5 எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
இலை அடை மற்றும் இட்லி மாவு கொழுக்கட்டை செய்யலாம் வாங்க!
Gulab Jamun Milkshake

இப்போது ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிர் 1கப் சேர்த்து அத்துடன் சீரகத்தூள் 1 தேக்கரண்டி, சாட் மசாலா 1 தேக்கரண்டி, டிரை மேங்கோ பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து இத்துடன் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டிகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலை வைத்து பரிமாறவும். இந்த சம்மருக்கு ஜில்லுன்னு இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com