
இன்றைக்கு சுவையான கம்பு புட்டு மற்றும் ஸ்வீட் வடை ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கம்பு புட்டு செய்ய தேவையான பொருட்கள்.
கம்பு-2 கப்.
உப்பு-தேவையான அளவு.
நாட்டுச் சர்க்கரை-1 கப்.
தேங்காய் துருவல்-1/2 கப்.
கம்பு புட்டு செய்முறை விளக்கம்.
முதலில் 2கப் கம்பை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்த எடுத்துக்கொள்ளவும். இப்போது தண்ணீரை நன்றாக வடிகட்டிவிட்டு ஃபேனில் இளஞ்சூட்டில் வறுக்கவும். இப்போது கம்பு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அதை கொட்டி உப்பு தேவையான அளவு சேர்த்து விட்டு வெதுவெதுப்பான நீர் சிறிது விட்டு நன்றாக கலந்துவிடவும். மாவை கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
இப்போது இட்லி பாத்திரத்தில் இதை வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த கம்பை ஒரு பத்திரத்தில் பரப்பி விட்டு அதில் தேங்காய் துருவல் ½ கப், நாட்டுச்சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கம்பு புட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ஸ்வீட் வடை செய்ய தேவையான பொருட்கள்;
உளுந்து-5 கப்.
ஏலக்காய்-5
தேங்காய் துருவல்-2 கப்.
நாட்டுச் சர்க்கரை-5 கப்.
எண்ணெய்-தேவையான அளவு.
ஸ்வீட் வடை செய்முறை விளக்கம்;
முதலில் 5 கப் உளுந்தை நன்றாக கழுவிவிட்டு தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஊறவைத்த உளுந்து மற்றும் 5 ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும். துருவி தேங்காய் 2 கப், நாட்டுச்சர்க்கரை 5 கப் சேர்த்து மாவை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடையை தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஸ்வீட் வடை தயார். இதில் வாழைப்பழம், நெய், நாட்டுச்சர்க்கரை சிறிது தூவி பிசைந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சேலம் பக்கம் இது மிகவும் பிரபலமான இனிப்பு வகையாகும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.