மொறு மொறு முருங்கைக்கீரை ரவா தோசை வித் மஷ்ரூம் கிரீன் மசாலா செய்யலாமா?

 Moringa Rava Dosa with Mushroom Green Masala...
Can we make Moru Moru Moringa Rava Dosa with Mushroom Green Masala?Image Credits:YouTube
Published on

ன்றைக்கு சுவையான மொறு மொறு முருங்கைக்கீரை தோசை மற்றும் மஷ்ரூம் கிரீன் மசாலா ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முருங்கைக்கீரை ரவா தோசை செய்ய தேவையான பொருட்கள்.

முருங்கைக்கீரை பேஸ்ட் செய்வதற்கு,

எண்ணெய்-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

பூண்டு-2

சின்ன வெங்காயம்-3

பச்சை மிளகாய் -2

முருங்கைக்கீரை-1 கைப்பிடி.

மாவிற்கு,

ரவா-1கப்.

அரிசி மாவு-1 கப்.

மைதா மாவு- 3 தேக்கரண்டி.

பெரிய வெங்காயம்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி- சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

முந்திரி-5

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

இஞ்சி-1 துண்டு.

உப்பு- தேவையான அளவு.

நெய்-தேவையான அளவு.

முருங்கைக்கீரை ரவா தோசை செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி சீரகம் 1 தேக்கரண்டி, பூண்டு 2, சின்ன வெங்காயம் 3, பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கிவிட்டு சுத்தம் செய்துவைத்த முருங்கைக்கீரை  1 கைப்பிடி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 1 கப் ரவா, 1 கப் அரிசி மாவு, 3 தேக்கரண்டி மைதா, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பச்சைமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு,கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய முந்திரி 5, மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த முருங்கைக்கீரை பேஸ்டை சேர்த்து இத்துடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 20 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். தோசைக்கல் சூடானதும் நெய் தடவி தோசை மாவை ஊற்றி மொறு மொறுவென்று எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை ரவா தோசை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மஷ்ரூம் கிரீன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்.

பொதினா-1 கைப்பிடி.

கொத்தமல்லி-சிறிதளவு.

கருவேப்பிலை-2 கொத்து.

பச்சை மிளகாய்-2

பூண்டு-4

இஞ்சி-1 துண்டு.

சோம்பு-2 தேக்கரண்டி.

சீரகம்-2 தேக்கரண்டி.

மிளகு-2 தேக்கரண்டி.

பிரியாணி இலை-1

பட்டை-1

மஷ்ரூம்-1 கப்.

தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு.

வெங்காயம்-2

தக்காளி-2

உப்பு-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய பொங்கடம் வித் தக்காளி கொத்சு செய்யலாம் வாங்க!
 Moringa Rava Dosa with Mushroom Green Masala...

மஷ்ரூம் கிரீன் மசாலா செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 1 கைப்பிடி பொதினா, கொத்தமல்லி சிறிதளவு, கருவேப்பிலை 2 கொத்து, பச்சை மிளகாய் 2, பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, சோம்பு  2 தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 1, பிரியாணி இலை 1, சீரகம் 2 தேக்கரண்டி, மிளகு 2 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சுத்தம் செய்து வைத்திருக்கும் மஷ்ரூம் 1 கப்பை சேர்த்து 2 நிமிடம்  வதக்கிக் கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் தேங்காய் எண்ணெய் 4 தேக்கரண்டி சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி 2 சேர்த்து வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடிப்போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும். இப்போது இதில் வதக்கி வைத்திருக்கும் மஷ்ரூம்மை சேர்த்து மூடிப்போட்டு 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான மஷ்ரூம் கிரீன் மசாலா தயார். இதை சப்பாத்தி, தோசை, நெய் சாதம்,இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com