செம டேஸ்டியான உருளைக்கிழங்கு வடாம் போடலாமா?

உருளைக்கிழங்கு வடாம்...
உருளைக்கிழங்கு வடாம்...

மார்ச் மாத வெயில் வடாம் போட உகந்தது. கலந்த சாதத்திற்கு வடாம் நல்ல காம்பினேஷன். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த வடாம் வத்தலை வெயிலை வீணாக்காமல் போட்டு பத்திரப்படுத்த ஒரு வருடத்திற்கு அதாவது அடுத்த மார்ச் வரை கவலைப்படாமல் நினைத்தபோது பொரித்து சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு வடாத்திற்கு ஜவ்வரிசி தேவை இல்லை. 

அரிசி மாவு 2 கப் 

உருளைக்கிழங்கு 2 

உப்பு தேவையானது 

பெருங்காய தூள் சிறிது

சில்லி ஃபிளேக்ஸ் 3 ஸ்பூன்

சீரகம் ஒரு ஸ்பூன்

எலுமிச்சம் பழம் 1

அரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.  அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

நடுக் கொதி வந்ததும் உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை நிதானமாக்கி அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறவும்‌ மாவு நன்கு வெந்து கண்ணாடி போல் ஆனதும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். எலுமிச்சம் பழச்சாறு, சீரகம் கலந்து சிறிது ஆறியதும் வெயிலில் பிளாஸ்டிக் சீட் விரித்து ரிப்பன் அச்சு அல்லது மகிழம்பூ அச்சில் பிழியவும். இவற்றில் துளைகள் பெரியதாக இருப்பதால் சில்லி ஃபிளேக்ஸ் அடைத்துக் கொள்ளாமல் வரும்.

4 நாட்கள் நன்றாக காய்ந்ததும் எடுத்து பத்திரப் படுத்தவும். தேவைப்படும் சமயம் பொரித்து சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

பூசணி கருவாடாம்!

பூசணி ...
பூசணி ...

வெள்ளை பூசணி 1/2 கிலோ 

உளுந்து 100 கிராம் 

வெள்ளைக் காராமணி 200 கிராம் பச்சை மிளகாய் 20 

கல் உப்பு தேவையானது 

பெருங்காய பொடி சிறுது

பூசணிக்காயை தோல் நீக்கி விதைகளை எடுத்து கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். உளுந்து, காராமணி ஆகியவற்றை தனித்தனியே முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் உளுந்து, காராமணி, பச்சை மிளகாய், கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். கடைசியாக துருவிய பூசணியை நீரை ஒட்ட பிழிந்து சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பெருங்காயத்தூள் கலந்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ட்ரெண்ட் ஆகிவரும் பெண்களுக்கான கண்கவர் ஹெட்பேண்ட்கள்!
உருளைக்கிழங்கு வடாம்...

பிளாஸ்டிக் சீட்டை வெயிலில் விரித்து அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் ஸ்பூன் கொண்டு சிறு சிறு அப்பளங்களாக வைக்கவும். ஸ்பூன் கொண்டு தேய்க்க வேண்டாம். நான்கு நாட்களில் நன்கு காய்ந்து விடும். இதனை காற்று போகாத டப்பாவில் பத்திரப்படுத்தி வைக்கவும். இதனை ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஃப்ரீசரில் வைத்தால் ஒரு வருடம் கூட வைத்து உபயோகிக்கலாம். 

இதனை புளிக்கூட்டு, மோர் குழம்பு, கீரை கூட்டு, பொரிச்ச குழம்பு ஆகியவற்றிற்கு தேங்காய் அல்லது நல்லெண்ணெயில் பொரித்து போட மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com