
இன்றைக்கு சுவையான கடலை உருண்டை மற்றும் எள் உருண்டை ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்.
வறுத்த கடலை-400 கிராம்.
அரைத்த கடலை-100 கிராம்.
தண்ணீர்-100 ml.
வெல்லம்-200 கிராம்.
நெய்-சிறிதளவு.
கடலை உருண்டை செய்முறை விளக்கம்.
முதலில் 400 கிராம் வறுத்த கடலையை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் 100 கிராம் வறுத்த கடலையை கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 100 ml தண்ணீர் விட்டு அது கொதித்ததும் 200 கிராம் வெல்லம் சேர்த்து பாகு நன்றாக தேன் பதத்திற்கு வரும்வரை வைத்திருக்கவும்.
இதில் 100 கிராம் பொடியாக அரைத்து வைத்திருக்கும் கடலையை சேர்த்துவிட்டு மீதி 400 கிராம் வறுத்த கடலையை சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு கையில் சிறிது நெய் தடவிவிட்டு கடலை சூடாக இருக்கும்போதே உருண்டைகளை பிடிக்கவும். அவ்வளவு தான் சுவையான கடலை உருண்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
எள் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்.
கருப்பு எள்-1 கப்.
வெள்ளை எள்-1 கப்.
வெல்லம்-1 கப்.
ஏலக்காய்-1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
எள் உருண்டை செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து கருப்பு எள் 1 கப், வெள்ளை எள் 1 கப் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் 1 கப் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நன்றாக தேன் பதத்திற்கு பாகு தயார் செய்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்திருக்கும் எள், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி சேர்த்து செய்து வைத்திருக்கும் பாகை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு உருண்டைகளாக பிடிக்கலாம். அவ்வளவு தான் சுவையான எள் உருண்டை தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப்பாருங்கள்.