
இன்றைக்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் விவிகா மற்றும் கலகலா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
விவிகா செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி-1கப்.
அரிசி மாவு-1 கப்.
வாழைப்பழம்-1
ஏலக்காய்-2
சர்க்கரை-1 கப்.
துருவிய தேங்காய்-1/2 கப்.
திராட்சை-5
முந்திரி-5
சிறுபருப்பு-2 தேக்கரண்டி.
பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.
உப்பு-சிறிதளவு.
விவிகா செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் அரிசி 1 கப்பை நான்குமணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு தட்டில் பரப்பி அரை மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும். இப்போது இதை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதிலே தண்ணீர் ஒரு கப் ஊற்றி நன்றாக கொதித்ததும் அதில் செய்து வைத்திருக்கும் அரிசியை ¼ கப் சேர்த்துக்கொள்ளவும். அது நன்றாக வெந்து வந்ததும் அரிசி மாவு 1 கப்பை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக மாவை தயார் செய்து மூடிவைத்து ஒருநாள் முழுவதும் புளிக்கவிடுங்கள்.
இப்போது மிக்ஸியில் வாழைப்பழம் 1, ஏலக்காய் 2, சர்க்கரை 1 கப் சேர்த்து நன்றாக அரைத்து அதை ஊற வைத்த மாவோடு சேர்த்துவிட்டு துருவிய தேங்காய் ½ கப், முந்திரி 5, திராட்சை 5 சிறுபருப்பு 2 தேக்கரண்டியை நன்றாக வறுத்து சேர்த்துக்கொள்ளவும். பேக்கிங் சோடா ½ தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும். இப்போது இதை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான விவிகா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கலகலா செய்ய தேவையான பொருட்கள்;
ரவை-4 தேக்கரண்டி.
உருக்கிய நெய்-6 தேக்கரண்டி.
தேங்காய் பால்-6 தேக்கரண்டி.
பவுடர் சுகர்-1/2கப்.
மைதா-1கப்.
பேக்கிங் பவுடர்-1 சிட்டிகை.
உப்பு-1 சிட்டிகை.
கலகலா செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 4 தேக்கரண்டி ரவை, 4 தேக்கரண்டி உருக்கிய நெய், 4 தேக்கரண்டி தேங்காய் பால் சேர்த்து கலந்துவிட்டு 20 நிமிடம் ஊறவிடவும். இதில் ½ கப் பவுடர் சுகர், 1 கப் மைதா, பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை சேர்த்து இதனுடன் 2 தேக்கரண்டி உருக்கிய நெய், 2 தேக்கரண்டி தேங்காய்பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது பிசைந்த மாவை குட்டி குட்டி பந்துகளாக உருட்டிக் கொள்ளவும். புதிதான சீப்பை எடுத்துக்கொண்டு அதில் நெய் தடவிவிட்டு உருண்டை மாவை அதில் வைத்து அழுத்தி உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை காய வைத்திருக்கும் எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறிய பிறகு பவுடர் சுகரை சற்று மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கலகலா தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.