உடலுக்கு ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதில் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த பதிவில் சூப்பர் சுவையில் வித்தியாசமான குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் நீங்கள் நினைப்பதை விட நன்றாகவே இருக்கும்.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 2
கடலை மாவு - ¼ கப்
கடுகு - ½ ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
எலுமிச்ச பழச்சாறு - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, பெரிய வெங்காயம், பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அவை அனைத்தும் நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும் அதில் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்ததாக அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு கடையை மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக விட வேண்டும். இறுதியில் குடமிளகாய் வெந்ததும் கொஞ்சமாக கடலை மாவை வாணலியில் சேர்த்து வறுத்து அதில் சேர்க்க வேண்டும்.
கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிட்டு இறுதியில் கொஞ்சமாக எலுமிச்சை ஜூஸ் மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கிளறி இறக்கினால் சூப்பர் சுவையில் குடமிளகாய் பொரியல் தயார்.