கேசரி என்பது தமிழ்நாட்டில் பரவலாக செய்யப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு. இதில் கேரட் சேர்த்து செய்யும்போது, அதன் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. இது வெறும் இனிப்பு மட்டுமல்ல கேரட்டில் நிறைந்திருக்கும் பீட்டா-கரோட்டின், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நமது உடலுக்கு நன்மை பயக்கும் ஒரு உணவு. இந்த பதிவில் கேரட் கேசரி எப்படி செய்வது என விரிவாகப் பார்க்கலாம்.
கேரட் கேசரி செய்யத் தேவையான பொருட்கள்:
கேரட் - 2 துருவியது
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன்
முந்திரி - 5
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய கேரட்டை போட்டு, சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். கேரட் முற்றிலுமாக வெந்த பிறகு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ரவை சிறிதளவு சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை வருக்க வேண்டும்.
அடுத்ததாக வறுத்த ரவையில் வேகவைத்த கேரட்டை சேர்த்துக் கிளறவும். பின்னர், பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே கட்டிகள் இல்லாமல் கிளறவும். பால் நன்றாக கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கேசரி கெட்டியாகும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் பொடி மற்றும் வறுத்து பொடித்த முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால் சூப்பரான சுவையில் கேரட் கேசரி தயார். இந்த கேரட் கேசரியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
மேலே குறிப்பிட்ட செய்முறையை பின்பற்றி நீங்களும் சுவையான கேரட் கேசரி முயற்சித்து பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு பிடிக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கேரட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம். பாலின் அளவையும் கேசரியின் கெட்டி தன்மைக்கு ஏற்ப மாற்றலாம்.
இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து, உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.