வீட்டிலேயே கேரட்டில் லட்டு செய்து சாப்பிட்டதுண்டா? ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்! 

Carrot Laddu
Carrot Laddu Recipe

இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் வீட்டில் செய்து சாப்பிடும் இனிப்புகள் என்றால் அது ஒரு தனி அனுபவம்தான். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கேரட் லட்டு. இது சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. கேரட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. 

தேவையான பொருட்கள்:

  • கேரட் - 500 கிராம் (துருவியது)

  • தேங்காய் துருவல் - 1 மூடி

  • சர்க்கரை - 250 கிராம்

  • நெய் - 50 கிராம்

  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

  • முந்திரி, உலர்ந்த திராட்சை - அலங்கரிக்க

கேரட் லட்டு செய்முறை: 

முதலில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், கேரட் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். கேரட் நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்குங்கள். 

இந்த கலவை பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அதில் சர்க்கரை சேர்த்து ஒன்றாக கிளற வேண்டும். 

பின்பு அந்த கலவை ஆரியதும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து அதில் முந்திரி திராட்சை சேர்த்து அலங்காரம் செய்தால், வெறும் 15 நிமிடத்தில் கேரட் லட்டு தயார். 

இதை தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கும், திடீரென விருந்தினர்கள் வரும்போதும் செய்து பரிமாறினால் அதன் சுவையில் அனைவரும் மெய்மறந்து போவார்கள். 

இதையும் படியுங்கள்:
சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம்! நீங்கள் ருசிக்க தயாரா?
Carrot Laddu

கேரட் லட்டுவை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட காற்று பூக்காத டப்பாவில் அடைத்து வைக்கவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப லட்டுவில் பாதாம், பிஸ்தா போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினாலும் சுவையாக இருக்கும். 

இந்த செய்முறை உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்களது கருத்துக்களை மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com