ஹோலியைக் கொண்டாடலாம் ஜாலியா ’குஜ்ஜியா’ ஸ்வீட்டுடன்!

’குஜ்ஜியா’ ஸ்வீட்...
’குஜ்ஜியா’ ஸ்வீட்...

ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு வடமாநிலங்களில் இந்த குஜ்ஜியாவை விசேஷமாக செய்வார்கள். இந்த இனிப்பு வகை உத்திரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சுவை மிகுந்த இனிப்பு வகையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மைதா -2 கப்.

நெய்- 4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

இனிப்பு பூரணம் செய்ய

கோவா-200 கிராம்.

நெய்-1 தேக்கரண்டி.

தேங்காய் துருவல்-1/2 கப்.

பொடியாக வெட்டிய முந்திரி- ½ கப்.

பொடியாக வெட்டிய பாதாம்-1/2 கப்.

சக்கரை பவுடர் -5 தேக்கரண்டி.

உலர்ந்த திராட்சை-10.

ஏலக்காய் பொடி-1/4 தேக்கரண்டி.

சக்கரை பாகு செய்ய,

சக்கரை-1/2கப்.

தண்ணீர்-1/2 கப்.

குங்குமப்பூ- தேவையான அளவு.

 செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் மைதாவை எடுத்துக்கொள்ளவும். அதில் 4 தேக்கரண்டி நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி பதத்திற்கு மாவை பிசைந்து 30 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் 200 கிராம் கோவாவை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி எடுக்கவும். இப்போது ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ½ கப் தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். இப்போது அத்துடன் ½ கப் முந்திரி மற்றும் ½ கப் பாதாம் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும். இப்போது இதை ஏற்கனவே செய்து வைத்திருக்கும் கோவாவுடன் சேர்த்து 10 உலர்ந்த திராட்சை, 5 தேக்கரண்டி பொடியாக்கிய சக்கரை, ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கின்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒருஃபேனை எடுத்து அதில் 1/2கப் சக்கரை, 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு குங்குமப்பூ சேர்த்து சற்று பாகு சற்று பிசுபிசுவென்று வந்தால் போதுமான அளவில் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மறைந்து தோன்றும் கடற்கரை எங்குள்ளது தெரியுமா?
’குஜ்ஜியா’ ஸ்வீட்...

இப்போது ஊற வைத்த மாவை எடுத்து சிறிது சிறிதாக உருண்டை உருட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு உருண்டையை எடுத்து பூரி போல தேய்த்து எடுத்துக் கொண்டு செய்து வைத்திருக்கும் பால்கோவா கலவையை தேய்த்து வைத்திருக்கும் மாவின் நடுவில் வைத்து மடிக்கவும். மடித்த ஓரங்களை நன்றாக அழுத்தி விடவும். பிறகு ஓரங்களை கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கி விடலாம் அல்லது அப்படியே விடலாம். இது போன்று எல்லா மாவையும் செய்து உள்ளே கலவையை வைத்து ஓரங்களை நன்றாக அழுத்தி முறுக்கி விடவும்.

பிறகு ஒரு ஃபேனில் நெய் ஊற்றி அதில் இந்த குஜ்ஜியாவை நன்றாக கோல்டன் பிரவுன் நிறத்தில் பொரியும் வரை வைத்து எடுத்து செய்து வைத்திருக்கும் பாகில் போட்டு வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஒரு பிளேட்டில் குஜ்ஜியாவை அடுக்கி வைத்து மேலே பொடியாக நறுக்கிய பாதாம் தூவி பரிமாறவும். இப்போது சுவையான குஜ்ஜியா தயார். வீட்டிலே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com