சப்புக் கொட்ட வைக்கும் பாப்டி சாட்டும், பாலக் சென்னா சூப்பும்!

Variety chaat items with soup...
healthy snacksImage credit - youtube.com
Published on

ம் தமிழ்நாட்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடிக்கும் குழந்தைகளுக்கு டெல்லி வீதிகளில் சக்கப்போடு போடும் இந்த சாட் செய்து தாருங்கள். சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கூடவே சத்தான பாலக் சென்னா சூப்பையும் தந்தால் ஜோர்தான்.

பாப்டி சாட்
தேவையானவை:
மைதா - ஒரு கப் (கோதுமையும் உபயோகிக்கலாம்)
ஓமம் -  1/4 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
மெல்லிய சேவ் – சிறிதளவு (கடைகளில் கிடைக்கும்)
எண்ணெய் உப்பு - தேவையான அளவு மசாலாவுக்குத் தேவையானது
பெரிய உருளைக்கிழங்கு - 1 
கருப்பு அல்லது வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப்
பெரிய வெங்காயம் -1
பெங்களூர் தக்காளி -1
கொத்தமல்லி தழை - சிறிது மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
பிளாக் சால்ட் (கருப்பு உப்பு) - 1/4 டீஸ்பூன் ஆர்ம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த் தூள்) -1/2 டீஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து  தோலுரித்து வைக்கவும். கருப்பு அல்லது வெள்ளை கொண்டை கடலையை  ஊறவைத்து குக்கரில் இட்டு நன்கு வேகவைத்து மசிக்கவும். வெங்காயம் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கவும்.

மைதாவுடன் ஓமம், உப்பு, ரவை, சிறிது எண்ணெய் சேர்த்து சிறிது அளவு நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து சிறிய சிறிய பூரிகளாக திரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும். லேசாக குத்தி விட்டு பொரித்தால் உப்பாமல் தட்டையாக வரும். இதுதான் பாப்டி எனப்படும் தட்டை.

இப்போது வெந்த உருளைக்கிழங்கை சிறு சிறு  துண்டுகளாக நறுக்கி இதனுடன் மசித்த கொண்டைக்கடலை மற்றும் மசாலா செய்ய கொடுத்துள்ள மிளகாய்த்தூள் ஆம்சூர் பவுடர் கருப்பு உப்பு போன்ற மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும். பொரித்த பாப்டிகளைத்   தட்டில் வைத்து உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி  அதன் மேலே சேவ் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். இதே மசாலாவை தயிர் விட்டுத் தந்தால் அதுதான் தனி பாப்டி சாட். வட இந்தியாவின் பிரபலமான வீதி உணவை சுகாதாரமாக நாமும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

பாலக் சென்னா சூப்
தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப் பாலக்கீரை - 1 சிறிய கட்டு
பச்சை மிளகாய் அரைத்த விழுது - 3/4 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 வெண்ணெய் - 1டீஸ்பூன்
காய்ச்சிய பால் - 2 டீஸ்பூன்
வேக வைத்த நூடுல்ஸ் - 1 கப் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 1 டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
மகாபாரதத்திற்கும், அவியலுக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கிறதா?
Variety chaat items with soup...

செய்முறை:

வெள்ளை கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வைத்து தேவையான நீர் சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். கொண்டைக் கடலை ஆறியதும் பச்சை மிளகாய் விழுது உட்பட இஞ்சி பூண்டு பாலக்கீரை தேவையான உப்பு சேர்த்து மீண்டும் ஒரு விசில் விட்டு எடுக்கவும். பின் திறந்து  பாலில் கான்பிளார் மாவைக் கரைத்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும். பரிமாறும்போது வேகவைத்த நூடுல்ஸ் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கொண்டைக்கடலை விழுது சேர்த்து காரம் தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள்  தூவி ஸ்பூன் போட்டுத் தாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com