மகாபாரதத்திற்கும், அவியலுக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கிறதா?

Aviyal
Is there any such connection between Mahabharata and Aviyal?Image Credits: YouTube
Published on

காய்கறிகளை அவித்து செய்யப்படும் அவியல் மகாபாரத காலத்தில் இருந்தே செய்யப்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தற்போது அவியலில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுவிட்டன. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவியல் உருவானக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

'அவியல்' தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். இதை அடையுடன் சேர்த்து இங்கே உண்ணுவார்கள். அவியல் என்றால் காய்கறிகளை தண்ணீரில் சேர்த்து வேகவைப்பது என்று பொருள். காய்கறிகள் சேர்க்கப்பட்டு கெட்டியாகவே அவியல் செய்யப்படும்.

பஞ்சபாண்டவர்களும், திரௌபதியும் 13 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு 1 ஆண்டு அஞ்ஞாதவாசத்திற்காக விராட ராஜ்ஜியத்திற்கு புறப்படுகிறார்கள். அங்கே கௌரவர்களிடம் சிக்காமல் இருக்க ஆறு பேரும் தங்கள் தோற்றம் மற்றும் பெயரை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் 'வல்லவன்' என்ற பெயருடன் விராட ராஜ்ஜிய அரண்மனையில் சமையல் காரனாக வேலை செய்கிறார். ஒருநாள் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி விராட ராஜ்ஜிய அரண்மனைக்கு துர்வாச முனிவர் வருகிறார். அதனால், அவரை உபசரிக்க வேண்டும் என்று விராட மன்னன் பீமனைக் கூப்பிட்டு குறைந்த நேரத்தில் அருமையான உணவை சமைத்து எடுத்து வருமாறுக் கூறுகிறார்.

மேலும் அந்த முனிவர் எல்லோரும் உணவருந்திய பின்பு வந்ததால், பீமனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மதியவேளை உணவு செய்தப்போது மீதமிருந்த காய்கறிகளைக் கொண்டு ஒரு அருமையான அவியலை தயாரிக்கிறார். அந்த அவியலை ருசிப்பார்த்த முனிவர் மிகவும் நன்றாக இருந்ததாக பாராட்டிவிட்டும், வாழ்த்திவிட்டும் சென்றார்.

இதையும் படியுங்கள்:
மக்காச்சோளம் Vs ஸ்வீட் கார்ன்: உடலுக்கு ஆரோக்கியம் தருவது எது?
Aviyal

அவியலில் பெரும்பாலும் 13 வகையான காய்கறிகள் சேர்க்கப்படும். சேனைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், கத்தரி, வெள்ளரி, முருங்கை, புடலங்காய் போன்ற காய்கறிகளும் அத்துடன் புளிப்பிற்கு தயிர் அல்லது மாங்காயுடன் துருவிய தேங்காய், கருவேப்பிலை சேர்த்து சமைக்கப்படும்.

தற்போது அவியலில் பலவிதம் வந்துவிட்டது. முட்டை அவியல், காய்கறி அவியல், கீரை அவியல், வெண்டை அவியல், கோவக்காய் அவியல் என்று இன்னும் பலவிதமான அவியல்கள். கல்கத்தாவில் செய்யப்படும் அவியலுக்கு ‘சுக்டோ’ என்று பெயர். இதை சாதத்துடன் சேர்த்து உண்பார்கள். சுக்டோ சற்று கசப்புத்தன்மையை கொண்டிருக்கும். இது கண்டிப்பாக பெங்காலி திருமணத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு உணவு வகையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com