ஜப்பானின் பிரபலமான இனிப்பு வகைகளைப் பற்றி பார்க்கலாம்!

Japanese Traditional Sweets
Japanese Traditional SweetsImage Credits: AllAbout-Japan.com

ப்பானின் பாரம்பரிய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாகும். ஜப்பானிய உணவுகள் இயற்கையான உணவு பொருட்களை வைத்து மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருக்கும். ஜப்பான் இனிப்பு வகைகள் அதன் வெரைட்டிக்கு புகழ் பெற்றதாகும். இன்றைக்கு மிகவும் பிரபலமான ஜப்பானின் இனிப்பு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மொச்சி (Mochi)

மோச்சி மிகவும் பாரம்பரியமான ஜப்பானின் இனிப்பு வகையாகும். இதை அரிசியிலிருந்து தயாரிக்கிறார்கள். அரிசியில் உரல் போன்ற ஒன்றை வைத்து இடித்து அதை பேஸ்ட் ஆக்கிய பிறகு அதை வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து விரும்பிய வடிவத்தை கொடுப்பார்கள். மோச்சி பண்டிகை காலங்களில் அதிகமாக உண்ணப்படும் இனிப்பு வகையாகும்.

டாங்கோ (Dango)

இது அரிசி மாவிலிருந்து செய்யப்படும் டம்பிளிங் (Dumpling) போன்ற இனிப்பு வகையாகும். இதை சற்றே மென்று சாப்பிடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும். அரிசிமாவில் சுடுநீர் ஊற்றி மாவாக பிசைந்து அதை வேகவைத்து செய்யப்படும் இனிப்புதான் டாங்கோவாகும்.

மொனாகா (Monaka)

மொனாகா ஜப்பானின் பாரம்பரிய இனிப்பு வகையில் ஒன்றாகும். அரிசியிலிருந்து செய்யப்படும் மொறுமொறுப்பான Wafer களுக்கு நடுவிலே இனிப்பான சிகப்பு பீன் பேஸ்ட்களை வைத்து செய்வதாகும். இதை செர்ரி பிளாசம் பூக்களின் வடிவத்தில் செய்வது இதன் சிறப்பாகும்.

டைபுக்கு (Daifuku)

மொச்சியை வைத்து செய்யப்படும் சிறிய கேக் வகை அதனுள்ள சிகப்பு பீன் பேஸ்ட்கள் வைக்கப்பட்டு வெள்ளை, பிங்க், பச்சை நிறங்களில் வருகிறது.

யோகன் (Yokan)

யோகன், ஜெல்லி போன்ற இனிப்பு வகையாகும். சிகப்பு அல்லது வெள்ளை பீன்ஸ், அகர் அகார் மற்றும் சர்க்கரை சேர்த்து சதுர வடிவில் செய்யப்படுகிறது.

சென்பேய் (Senbei)

அரிசியை தீயில் வாட்டி இந்த ஸ்நாக்ஸை உருவாக்குகிறார்கள். அரிசியை தீயில் வாட்டுவதால் அருமையான வாசனையும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதை சோயா சாஸில் எள் மற்றும் இனிப்பு கலந்து அத்துடன் பரிமாறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முட்டை பப்ஸ் வித் வெஜ் சால்னா செய்யலாம் வாங்க!
Japanese Traditional Sweets

யட்சுகாசி (Yatsuhashi)

யட்சுகாசி இனிப்பு வகை அரிசி மாவை மெலிதாக செய்து அதை வேகவைத்து எடுத்து அதில் சக்கரையை தூவி செய்யப்படுவதாகும். இதன் உள்ளே சிகப்பு பீன் பேஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். இது முக்கோண வடிவில் செய்யப்பட்டிருக்கும்.

டோராயக்கி (Dorayaki)

பேன் கேக்குகளுக்கு நடுவிலே கிரீம்களை, சாக்லேட்களை தடவி செய்யப்படும் இனிப்பு வகையாகும்.

காப்பி ஜெல்லி (Coffee jelly)

பிளாக் காபியிலிருந்து செய்யப்படும் ஜெல்லி வகையாகும். அதன் மீது வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து பரிமாறப்படும். ஜப்பானில் உள்ள பழமையான உணவு விடுதியில் இதுபோன்ற இனிப்புகள் இன்றும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com