meta property="og:ttl" content="2419200" />
கடையிலே மிகவும் சுவையாக செய்யக்கூடிய முட்டை பப்ஸ் மற்றும் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் சால்னா எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யறதுன்னு இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க.
முட்டை பப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு-1 கப்.
முட்டை-3
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
மஞ்சதூள்-1/2 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
முட்டை பப்ஸ் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவை சேர்த்து கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். முட்டையை உரித்து இரண்டாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து ஃபேனில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சோம்பு 1 தேக்கரண்டி, சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிண்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். மாவை நன்றாக மீடியம் அளவிற்கு தேய்த்துக் கொண்டு அதில் சிறிது மைதா மற்றும் பட்டர் சேர்த்து மேலே தடவி கொள்ளவும். இதை நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்து அதில் ஒரு துண்டில் வெங்காயம் மற்றும் முட்டையை வைத்து மீதி துண்டுகளை வைத்து நன்றாக மூடிவிடவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் உப்பை நிரப்பி மேலே ஒரு தட்டை வைத்து செய்து வைத்திருக்கும் பப்ஸை அதில் வைத்து நன்றாக மூடி 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால் நல்ல கிரிஸ்பியான முட்டை பப்ஸ் தயார். நீங்களும் வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பாருங்க.
ஹோட்டல் வெஜ் சால்னா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க!
வெஜ் சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்-1 கப்.
முந்திரி-10
கசகசா-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி
தேங்காய்-1கப்
பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு-2
அன்னாசி பூ, பிரியாணி இலை-1
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
தனியா தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
பொதினா, கொத்தமல்லி- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
வெஜ் சால்னா செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் சின்ன வெங்காயம் 1கப், ஊற வைத்த கசகசா, முந்திரி பருப்பு, சோம்பு, நறுக்கிய தேங்காய் 1 கப், பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்போது குக்கரில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, கருவேப்பிலை சிறிது, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் அரைத்த முந்திரி கலவையை சேர்த்து கிண்டவும். இப்போது சால்னா பதத்திற்கு வர தண்ணீர் விட்டு கிண்டவும். நறுக்கி வைத்த பொதினா, கொத்தமல்லியை மேலே தூவி கலந்து விடவும். கொதி வந்ததும் குக்கரை மூடி நாலு விசில் வரை வேக விடவும். விசில் வந்த பிறகு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பரோட்டா வெஜ் சால்னா தயார். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க.