கருவேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இது உடலில் உள்ள பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும். குமட்டல், சீதபேதியை போக்கும் தன்மையை உடையது. இத்தகைய சிறப்புகளை கொண்ட கருவேப்பிலையை வைத்து ஒரு ரெசிபி செய்யலாம் வாங்க.
காலிஃபிளவர் கருவேப்பிலை செய்ய தேவையான பொருட்கள்;
காலிஃபிளவர்- 2 கப்.
கருவேப்பிலை-2 கப்.
பூண்டு-5பல்.
இஞ்சி- 2 துண்டு.
பச்சை மிளகாய்-3
ஜீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
மைதா மாவு-1 தேக்கரண்டி.
சோள மாவு-1 தேக்கரண்டி.
கடலை மாவு-1 தேக்கரண்டி.
அரிசி மாவு-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
காலிஃபிளவர் கருவேப்பிலை செய்முறை விளக்கம்;
முதலில் காலிஃபிளவரை சிறிது சிறிதாக வெட்டி உப்பு போட்டு தண்ணீரில் ஊற வைத்து விடவும். இப்போது மிக்ஸியில் 5 பூண்டு, 2 துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் 3, ஜீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி அத்துடன் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்த கருவேப்பிலை 2கப் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
இப்போது காலிஃபிளவரை நன்றாக வடிகட்டி எடுத்துவிட்டு அத்துடனே அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இப்போது அத்துடன் மைதா 1தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி, கடலை மாவு 1 தேக்கரண்டி, அரிசி மாவு 1 தேக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து நன்றாக சூடான எண்ணெய்யில் காலிபிளவரை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத் தெடுக்கவும். கடைசியாக எண்ணெய்யில் கருவேப்பிலையை சேர்த்து இறக்கவும். இப்போது ரொம்ப டேஸ்டியான காலிஃபிளவர் கருவேப்பிலை பிரை தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
மாதம்பட்டி ஸ்பெஷல் கத்திரி உருளை பொரியல்!
கத்தரி-1கப்.
உருளை-1கப்.
கடுகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
சாம்பார் பொடி-2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-10 இலை.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
மாதம்பட்டி ஸ்பெஷல் கத்திரி உருளை செய்முறை;
முதலில் ஒரு ஃபேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 2 வரமிளகாய், கருவேப்பிலை 10 இலை, சாம்பார் பொடி 2 தேக்கரண்டி இதையெல்லாம் எண்ணெய்யில் நல்லா ப்ரை செய்து விட்டு கத்திக்காய் 1கப், உருளை கிழங்கு 1 கப்பை அத்தோடு சேர்த்து வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும். இப்போது சுவையான மாதம்பட்டி ஸ்பெஷல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் தயார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.