செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் ஸ்வீட் - மசாலா பிரட் செய்யலாம் வாங்க!

Kummayam sweet
Kummayam sweet and Masala bread recipesImage Credits: Sailaja Kitchen
Published on

கும்மாயம், செட்டிநாட்டின் பாரம்பரிய இனிப்பு வகையாகும். கும்மாயம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பு என்பதால், எலும்புகள் வலிமை பெற வயதுக்கு வந்த பெண்களுக்கு நல்லெண்ணெய்யில் கலந்து சாப்பிடக் கொடுப்பார்கள். விஷேசம், பண்டிகை போன்ற சமயங்களில் இதை செய்வார்கள். ஆடி மாதத்தில் இந்த இனிப்பை அதிகம் செய்வதால் அதனால் இதை ஆடி கும்மாயம் என்றும் அழைப்பதுண்டு.

கும்மாயம் செய்ய தேவையான பொருட்கள்;

வெள்ளை உளுந்து -1 கப்

சிறுபருப்பு-1/4 கப்.

அரிசி-1/4 கப்.

ஏலக்காய்-3

வெல்லம்-1 கப்.

நெய்-6 தேக்கரண்டி.

கும்மாயம் செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து  வெள்ளை உளுந்து 1 கப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து சிறுபருப்பு 1/4கப் வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அரிசி ¼ கப் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் 3 சேர்த்து இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் மாவு 1 கப்பிற்கு 1 ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கப் வெல்லத்திற்கு 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வெல்லம் கரைந்து வந்ததும், கலக்கி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாக கிண்டவும். மாவு கெட்டியாக தொடங்கும் போது 6 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக கிண்டி இறக்கவும். இப்போது சுவையான கும்மாயம் ஸ்வீட் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

மசாலா பிரட் செய்ய தேவையான பொருட்கள்;

பிரட்-4

வெங்காயம்-1

கேரட்-1

குடை மிளகாய்-1

வெண்ணெய்- தேவையான அளவு.

சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.

தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.

உப்பு தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

சீஸ்- தேவையான அளவு.

கொத்தமல்லி -சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான ‘பிங்க் க்ளோ ஸ்மூத்தி’ மற்றும் ‘சப்போட்டா டேட் ஸ்மூத்தி’ செய்யலாம் வாங்க!
Kummayam sweet

மசாலா பிரட் செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் வெண்ணெய் சிறு துண்டு போட்டு சின்ன சின்னதாக வெட்டி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை அதில் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் சிறிது வெண்ணெய் துண்டு சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய குடைமிளகாய் 1, பொடியாக நறுக்கிய கேரட் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் உப்பு தேவையான அளவு, மஞ்சள்பொடி ¼ தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும். இப்போது இதில் தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி, சில்லி சாஸ் 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் பிரட் துண்டுகளை சேர்த்து சிறிது கொத்தமல்லி தூவி நன்றாக கிண்டி இறக்கவும். கடைசியாக அதன் மீது சீஸ் தூவி பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும். இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடலாம். நீங்களும் இந்த டிஷ்ஷை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com