செட்டிநாடு கார குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க! 

செட்டிநாடு கார குழிப்பணியாரம்.
செட்டிநாடு கார குழிப்பணியாரம்.
Published on

குழிப்பணியாணம் தமிழ்நாட்டில் பரவலாக செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவு. இது பொதுவாக இட்லி மாவு அல்லது உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. செட்டிநாடு பகுதியில் இதில் அதிக கார மசாலாக்கள் சேர்க்கப்படுவதால், தனித்துவமான சுவையை பெறுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என பல சுவைகளில் குழிப்பணியாரங்கள் செய்யப்படுகின்றன.

இதில், செட்டிநாடு கார குழிப் பணியாரம் அதன் தனித்துவமான சுவையால் பிற பகுதிகளில் தயாரிக்கப்படும் குழிப்பணியாரங்களில் இருந்து வேறுபடுகிறது. இதில் சேர்க்கப்படும் கார மசாலக்கள், வறுத்த பொருட்கள் மற்றும் தாளிப்பு ஆகியவை இதற்கு சிறப்பான சுவையைத் தருகின்றன. 

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி - 1 கப்

  • உளுந்து - 1/4 கப்

  • வெந்தயம் - 1 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • கார மசாலா பொடி - 1 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

  • வெங்காயம் - 1 (நறுக்கியது)

  • தக்காளி - 1 (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • தாளிப்பிற்கு: கடுகு, உளுந்து, கறிவேப்பிலை

செய்முறை

முதலில் இட்லி, அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். இதில் உப்பு சேர்த்து மாவை நன்கு கலக்கி, வெதுவெதுப்பான இடத்தில் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் காரமசாலா பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். 

இதையும் படியுங்கள்:
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? போச்சு!
செட்டிநாடு கார குழிப்பணியாரம்.

புளித்த மாவில், மேலே தயார் செய்த கூட்டை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை நீர்த்துப் போகச் செய்யலாம். 

இப்போது பணியார சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் லேசாக எண்ணெய் விட்டு சிறிது மாவு ஊற்றவும். மாவு ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மற்றொருபுறமும் வேகவைத்து எடுத்தால், சூப்பரான சுவையில் செட்டிநாடு ஸ்டைல் கார குழிப்பணியாரம் தயார்.

இதை காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com