புரோட்டின் சத்து நிறைந்த கொண்டைக் கடலையை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வடையாக செய்து தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு.
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் எல்லாம் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான வடை ரெடி. இந்த வடை எண்ணெய் குடிக்காது.
மேலே கிரிஸ்பியாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.