குழந்தைகள் விரும்பும் சோளம் பேரிச்சை பணியாரம்!


சோளம் பேரீச்சை பணியாரம்
சோளம் பேரீச்சை பணியாரம்

குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு வீட்டில் இருப்பார்கள்.  விளையாடி விளையாடி களைத்துப் போயிருக்கும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸை தர வேண்டும் என்று விரும்புவோம். ஸ்னாக்ஸாக இல்லாமல் அதுவே டிபன் ஆகவும் இருந்தால் இன்னும் வயிறு நிறையும். இதோ சத்தாகவும்  டிபன் ஆகவும் சோளப் பேரிச்சை பணியாரம் செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள்.


சோளம் பேரீச்சை பணியாரம் செய்ய தேவையானவை:

சோள மாவு  - ஒரு கப்
உளுந்த மாவு - அரைக்கப்
வெல்லம் - அரைக்கப் (பொடித்தது)
பேரிச்சம் பழம் - ஐந்து அல்லது ஆறு சமையல் சோடா-  ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - சிறிது
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

சோள மாவுடன் உளுத்தம் மாவு சேர்த்து நன்கு கலக்கி பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். வெல்லத்தை பொடித்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு வடிகட்டவும். வடிகட்டி வைத்திருக்கும் வெல்லக்கரைசலுடன் ஏலக்காய் தூள், சமையல் சோடா சேர்க்கவும். பிறகு சோள மாவு உளுந்த மாவு கலவையில் வெல்லக்கரைசலை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து   ஒரு 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே மூடி வைத்து ஊற விடவும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு வேலை இல்லையா? அப்போ நீங்க லக்கி! 

சோளம் பேரீச்சை பணியாரம்

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி குழிகளில் எண்ணெய் அல்லது சிறிது நெய் விட்டு  பணியார மாவை ஊற்றி  பொன்னிறமாக எடுத்து குழந்தைகளுக்குத் தந்தால் உங்களுக்கு முத்தம் நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com