மொறு மொறு சிரோட்டி (Chirote) வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

Chirote...
Chirote...

சிரோட்டி கர்நாடகாவின் பாரம்பரிய இனிப்பு வகையாகும். தற்போது மஹாராஸ்டிராவின் பாரம்பரிய இனிப்பாகவும் மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதை தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மஹாராஸ்டிர வீடுகளில் செய்து அசத்துவார்கள். நால்கொண்டாவில் இந்த இனிப்பை ‘பென்னி’ என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரோட்டி செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு-1 கப்.

உப்பு-1 சிட்டிகை.

நெய்-1 தேக்கரண்டி.

பேஸ்ட் செய்வதற்கு,

நெய்-2 தேக்கரண்டி.

சோளமாவு- 4 தேக்கரண்டி.

பிங்க் நிற புட் கலர்- தேவையான அளவு.

சக்கரை-1 கப்

தண்ணீர்-3/4 கப்.

எழுமிச்சை சாறு-6 சொட்டுக்கள்.

ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

சிரோட்டி செய்முறை விளக்கம்:

ரு பவுலில் 1 கப் மைதா மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். இப்போது மாவின் மீது சிறிது எண்ணெய் தடவி துணி போட்டு 30 நிமிடம் ஊற விடவும்.

இப்போது ஒரு பவுலில் 2 தேக்கரண்டி நெய், 4 தேக்கரண்டி சோளமாவு , அத்துடன் பிங்க் நிற புட் கலரை சிறிது தண்ணீரில் கலந்து அதையுமே இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

ஒரு ஃபேனில் 1 கப் சக்கரை,  ¾ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.  1 கம்பி பதம் சர்க்கரை பாகு வர வேண்டும். பாவை விரலில் எடுத்து வைத்து பார்த்தால் கம்பி போன்று வர வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு எழுமிச்சை பழச்சாறு 6 சொட்டு விட்டு கூடவே ¼ தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்து எடுத்து வைத்து விடவும்.

இப்போது மாவை எடுத்து ஐந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். அதை சப்பாத்தி மாவு போல தேய்த்து எடுத்து கொள்ளவும். அதில் செய்து வைத்திருக்கும் நெய் மற்றும் சோளமாவு பேஸ்ட்டை தடவவும். பிறகு இன்னொரு சப்பாத்தி மாவை அதன் மீது வைக்கவும் அதிலும் பேஸ்ட்டை தடவவும். இப்படியே ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பேஸ்ட் தடவி கடைசியாக இருக்கும்  சப்பாத்தி மாவை நன்றாக தேய்த்து விரித்து விடவும். இப்போது இந்த மாவை நன்றாக ரோல் செய்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்போது பூரி விரிப்பது போல மாவை சின்ன சின்னதாக விரித்து வைத்து கொள்ளவும். எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து பூரி போல செய்து வைத்திருப்பதை போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய்யை நன்றாக வடிகட்டிய பிறகு செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சேர்க்கவும். சக்கரை பாகு எல்லா இடங்களிலும் பட்ட பிறகு வெளியே எடுத்து வைத்து விடவும். இப்போது சுவையான சிரோட்டி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com