சோலே பிரட் டோஸ்ட்!
செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை பிரெட் ஸ்லைஸ்-6
உறவைத்து, வேகவைத்து, மசித்த சோலே- அரை கப்
நறுக்கிய வெங்காயத்தாள்- அரை கப்
துருவிய குடமிளகாய்- 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ், பீட்சா சாஸ் தலா- இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தாள், குடை மிளகாய் ,சோலே, உப்பு மிளகுத் தூள் ,கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி தக்காளி சாஸ் , பிட்சா சாஸ், சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இந்தக் கலவையை இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவே வைத்து, சூடான தோசை கல்லில் நெய் தடவி ,காய்ந்ததும் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். நல்ல புரோட்டின் நிறைந்த சிற்றுண்டி இது.
மில்க் மெய்டு கோக்கனட் லட்டு
செய்ய தேவையான பொருட்கள்:
மில்க் மெய்டு -400 கிராம்
டெசிகேட்டட் கோகனெட் -200 கிராம்
நெய் -3 டேபிள் ஸ்பூன்
வெற்றிலை- 15
செய்முறை:
டெசிகேட்டட் கோக்கனட்டில் சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கோக்கனட்டை போட்டு வறுக்கவும். மில்க் மெய்டுடன் வெற்றிலையின் காம்பை கிள்ளிவிட்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். லேசாக வறுத்த தேங்காய் துருவலில் மில்க் மெய்டு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும். கலவை நல்ல பதமாகி லட்டு பிடிக்கும் பதம் வரும் பொழுது இறக்கி, லட்டுகளாக பிடித்து முன்பு எடுத்து வைத்த தேங்காய் துருவலில் புரட்டி ஆறவிட்டு பரிமாறவும். சீக்கிரமாக செய்து பரிமாறி விடலாம். லட்டு பச்சையும் வெள்ளையும் கலந்த கலவையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ருசியிலும் அசத்தும். டெசிகேட்டட் கோக்கனட் கடைகளில் கிடைக்கும்.
டெசிகேட்டட் கோக்கனட் பிடிக்காதவர்கள், வீட்டில் தேங்காயை துருவி மிக்ஸியில் பொடித்தால் கிடைத்துவிடும். துருவல் ஒரே மாதிரியாக, வெள்ளை வெளேர் என்று இருப்பது அவசியம்.