சுவை மிகுந்த 'மன்ச்சௌ சூப்பி நூடுல்ஸ்' (Manchow Soupy Noodles) தெரியுமா?

Healthy Manchow Soupy Noodles
vegetable noodlesImage credit - youtube.com
Published on

காலை உணவாக அல்லது ஸ்னாக்ஸ் டைம் ஃபேவரைட்டாக நம் வீட்டு வளரும் மற்றும் வளர்ந்த குழந்தைகள் பலரும் விரும்பி உண்ணும் உணவாக மாறியுள்ளது நூடுல்ஸ். இதை கொதிக்கும் நீரில் போட்டு சுவையூட்டும் பவுடரை சேர்த்து ஐந்து நிமிடத்தில் தயாரித்து உண்ணலாம். காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவற்றைச் சேர்த்து ஊட்டச் சத்துக்களின் அளவை அதிகரிக்கச் செய்தும் உண்ணலாம். இங்கு நாம் சுவை மிக்க மன்ச்சௌ சூப்பி நூடுல்ஸ் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய பூண்டு  1½ டேபிள்ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய இஞ்சி   2 டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  1 டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தண்டு 1டேபிள்ஸ்பூன்

பச்சை வெள்ளை ஸ்பிரிங் ஆனியன் ¼ கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் ¼ கப் 

பொடியாக நறுக்கிய கேரட் ¼ கப்

பொடியாக நறுக்கிய குடை மிளகாய் ½ கப்

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ½ கப்

வெஜிடபிள் ஸ்டாக் 4 கப் 

சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்

க்ரீன் சில்லி சாஸ் 1 டீஸ்பூன் 

வினிகர் 1 டீஸ்பூன்

சர்க்கரை ½ டீஸ்பூன் 

ஹக்கா நூடுல்ஸ் (raw) 1 கப்

சோள மாவு (corn flour) 2 டேபிள்ஸ்பூன் 

லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய பச்சை நிற ஸ்பிரிங் ஆனியன் 2 டேபிள்ஸ்பூன்

ஆயில்  2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவைக்கு ஏற்ற அளவு 

மிளகுத் தூள் ½ டீஸ்பூன் 

இதையும் படியுங்கள்:
சுவையான மஞ்சள் பூசணி ப்ரை-வேர்க்கடலை ஸ்வீட் ரெசிபிஸ்!
Healthy Manchow Soupy Noodles

செய்முறை:

ஒரு சிறிய பௌலில் ¼ கப் தண்ணீர் எடுத்து அதில் சோள மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து தனியே வைக்கவும்.

ஒரு ஆழமான பானில் (pan) எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சை வெள்ளை ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றை சேர்க்கவும்.

தீயை அதிகளவு வைத்து பத்து செகண்ட் வதக்கவும்.

பின் அதனுடன் வெங்காயம், கேரட், குடை மிளகாய் முட்டைகோஸ் சேர்க்கவும். மிதமான தீயில் அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பின் அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். 

பின் அதில் ஹக்கா நூடுல்ஸ், உப்பு, மிளகுத்தூள் மற்றும் சோளமாவு கரைசலை சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்து விட்டு மிதமான தீயில்  ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வரை வேகவிடவும்.

நூடுல்ஸ் நன்கு வெந்தவுடன் தீயை அணைத்து விடவும்.

பின் லெமன் ஜூஸ் சேர்க்கவும். பச்சை நிற ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்தமல்லித் தண்டு சேர்த்து அலங்கரிக்கவும். 

ரெடியாகிவிட்ட மன்ச்சௌ சூப்பி நூடுல்ஸ்ஸை சூடாகப் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com