பேக்கரி ஸ்டைல் பட்டர் வெஜ் கேக் செய்வது எப்படி?

cake recipes in tamil
How to make a veggie cake?

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

கேரட் வெஜ் கேக்

தேவையான பொருட்கள்:

மைதா ஒரு கப்

சர்க்கரை முக்கால் கப்

கேரட் துருவியது முக்கால் கப்

தயிர் அரை கப்

ரீபைண்ட் ஆயில் கால் கப்(வெண்ணெய் பாதி சேர்க்கலாம்)

இரண்டு மூன்று ஸ்பூன் பால்

பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்

பேக்கிங் சோடா அரை ஸ்பூன்

பட்டை பொடி அரை ஸ்பூன்

வெனிலா எஸன்ஸ் அரை ஸ்பூன்

கைப்பிடி முந்திரி திராட்சை

இரண்டு சிட்டிகை உப்பு.

ஒரு கப் மைதாவில் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, பட்டை பொடி,உப்பு சேர்த்து நன்றாக கலக்கும்படி சலித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்காத கெட்டித் தயிரைச் சேர்த்து பீட்டரில் நன்றாக கலக்கவும். பொடித்த சர்க்கரையை சேர்த்து கலக்கவும். கால் கப் எண்ணெய் சேர்த்து கலக்கவும். எஸன்ஸ் சேர்க்கவும். கலந்து வைத்த மைதாவை சேர்த்து ஒரேப் பக்கமாக கலக்கவும். பாலை சேர்த்து கலக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்த பின் கேரட் சேர்த்து ஒரேப்பக்கமாக மடித்த மாதிரி கலந்துவிடவும். முந்திரி திராட்சை பாதியளவில் சேர்த்து கலந்து, வேறு ஒரு குக்கர் தட்டு அல்லது பாத்திரத்தில் பட்டர் பேப்பர் அடியில் வைத்து எண்ணெய் தடவி முக்கால் அளவிற்கு கேக் கலவையை ஊற்றவும். மேலாக மீதி முந்திரி திராட்சையை தூவவும்.

இதையும் படியுங்கள்:
திடீர் விருந்தினர்களா? கவலையை விடுங்க... சுவையான உருளைக்கிழங்கு அடை தயார்!
cake recipes in tamil

குக்கரில் அல்லது மூடியுள்ள பாத்திரத்தில் அடியில் சிறிது மணல் சேர்த்து ஐந்து நிமிடம் சூடாக்கி ஸ்டேண்ட் வைத்து அதில் கேக் பாத்திரத்தை வைத்து நாற்பது நிமிடம் குறைந்த தீயில் வேகவிட்டு எடுத்து ஆறவிட்டு கட் செய்யவும்.கேரட் வெஜ் கேக் தயார். அவனில் 180 டிகிரி சூட்டில் அரைமணி நேரம் வைக்கலாம்.

பட்டர் வெஜ் கேக்

தேவையான பொருட்கள்:

மைதா கால் கிலோ

சர்க்கரை கால் கிலோ

வெண்ணெய் கால் கிலோ.

புளிக்காத கெட்டியான தயிர் இருநூறு கிராம்.

பால் இரண்டு மூன்று ஸ்பூன்.

பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்

பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன்

இரண்டு சிட்டிகை உப்பு.

வெனிலா எஸன்ஸ் அரை ஸ்பூன்

முந்திரி திராட்சை டூட்டி ப்ருட்டி தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரையை பொடிக்கவும். மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, உப்பு நான்கையும் நன்றாக கலக்குமாறு இரண்டு மூன்று முறை சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பீட்டர் அல்லது மத்தில் கடையவும். பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.தயிர் சேர்த்து கலக்கவும். எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். மைதா கலவையைச் சேர்த்து ஒரே பக்கமாக கலக்கவும். பால் சேர்த்து நன்றாக ஒரே பக்கமாக மடித்துக் கலக்கவும். நட்ஸ்களைச் சேர்க்கவும். எண்ணெய் தடவி பாத்திரத்தில் முக்கால் அளவிற்கு ஊற்றவும். குக்கர் தட்டானால் இரண்டு தட்டு அளவிற்கு வரும். இரண்டு முறை பேக் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி? இதோ எளிய செய்முறைகள்!
cake recipes in tamil

குக்கரில் மணல் சேர்த்து சூடானதும் கலவை சேர்த்த குக்கர் தட்டை வைத்து குறைந்த தீயில் நாற்பது நிமிடங்களுக்கு வேகவிடவும். அவனில் 180 டிகிரி சூட்டில் அரைமணி நேரத்திற்கு பேக் செய்யலாம். ஆறியபின் துண்டுகள் போடவும். வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.