Christmas special cakes
Coconut cakes

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ரோஸ்மில்க் கேக் - தேங்காய் கேக் செய்யலாமா?

Published on

ன்றைக்கு சுவையான ரோஸ்மில்க் கேக் மற்றும் தேங்காய் கேக் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

ரோஸ்மில்க் கேக் செய்ய தேவையான பொருட்கள்.

பால்-1 கப்.

கன்டெஸ்ட் மில்க்-1/2 கப்.

பிரஸ் கிரீம்-1/2 கப்.

ரோஸ்மில்க் எசென்ஸ்-1/2 தேக்கரண்டி.

கேக் செய்ய,

சர்க்கரை-1/2 கப்.

தயிர்-1/2 கப்.

சன்பிளவர் ஆயில்-1/4 கப்.

பால்-1/2 கப்.

ரோஸ்மில்க் எசென்ஸ்-1 தேக்கரண்டி.

மைதா-1 கப்.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

Whipping cream-தேவையான அளவு.

ரோஜா இதழ்-சிறிதளவு.

பிஸ்தா-சிறிதளவு.

ரோஸ்மில்க் கேக் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு கப் பால், ½ கப் கன்டென்ஸ்ட் மில்க், ½ கப் பிரஸ் கிரீம், ½ தேக்கரண்டி ரோஸ்மில்க் எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பவுலில் ½ கப் சர்க்கரை, ½ கப் தயிர், ¼ கப் சன்பிளவர் ஆயில், ½ கப் பால், 1 தேக்கரண்டி ரோஸ்மில்க் எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.

இப்போது இதில் 1 கப் மைதா மாவு, 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். தேவைப்பட்டால் ¼ கப் பால் சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக ஸ்மூத் கன்ஸிஸ்டன்சி வந்ததும் மாவை டின்னில் மாற்றி பிரீ ஹீட்டட் ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 45 நிமிடம் வைத்து எடுத்துக்கொள்ளவும். Whipping cream ஐ நன்றாக பீட் செய்து எடுத்துக்கொள்ளவும்.

ஓவனில் இருந்து எடுத்த கேக்கை 1 மணி நேரம் துணிப்போட்டு மூடி வைத்துவிட்டு நாம் முதலில் செய்து வைத்திருந்த பால் கலவையை 1 கப் அதில் ஊற்றவும். பிறகு அடித்து வைத்திருக்கும் Whipping cream ஐ அதன் மீது சேர்த்து பிஸ்தா மற்றும் காய்ந்த ரோஜை இதழ்களை தூவி 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கேக்கை வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரோஸ்மில்க் கேக் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தேங்காய் கேக் செய்ய தேவையான பொருட்கள்.

தயிர்-1/4 கப்.

திக்கான தேங்காய் பால்-1/4 கப்.

காய்ச்சிய பால்-1/4 கப்.

வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.

தேங்காய் எண்ணெய்-1/4 கப்.

பவுடர் சர்க்கரை-1 கப்.

மைதா-1 ¼ கப்.

பேக்கிங் சோடா-1/2 கப்.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

Dessicated coconut-1/2 கப்.

ஜாம்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் வாழைத்தண்டு சூப் - மாதுளை பொரியல் ரெசிபிஸ்!
Christmas special cakes

தேங்காய் கேக் செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் ¼ கப் தயிர், ¼ கப் திக்கான தேங்காய் பால், ¼ கப் காய்ச்சிய பால், 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், ¼ கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 1 கப் பவுடர் சர்க்கரையை சேர்த்து அதையும் நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும்.

இதில் 1 ¼ கப் மைதா, ½ கப் பேக்கிங் சோடா, 1 கப் பேக்கிங் பவுடர், 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக ½ கப் Desiccated coconut சேர்த்துக்கொள்ளவும்.  கேக் டின்னில் கிரீஸ் பேப்பர் வைத்து மாவை அதில் ஊற்றிவிடவும்.

இப்போது அடுப்பில் பெரிய பாத்திரம் வைத்து உள்ளே கின்னத்தை திருப்பி வைத்து 5 நிமிடம் மூடிப்போட்டு பிரீ ஹீட் செய்துக்கொள்ளவும். இப்போது அதனுள் கேக் டின்னை வைத்து 35 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கேக்கை ½ மணி நேரம் ஆற விடவும். பிறகு கேக்கின் மீது ஜாமை தடவி அதன் மீது Desiccated Coconut ஐ துவி வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் கேக் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com