டேஸ்டியான சாக்கோ வாழைப்பழ கேக் - நெய் கேக் செய்யலாம் வாங்க!

Banana - ghee  Cake recipes
Banana Cake recipe
Published on

ன்றைக்கு சுவையான சாக்கோ வாழைப்பழ கேக் மற்றும் நெய் கேக் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சாக்கோ வாழைப்பழ கேக் செய்ய தேவையான பொருட்கள்.

வாழைப்பழம்-2.

சன் பிளவர் ஆயில்-1/4 கப்.

காய்ச்சிய பால்-1/2 கப்.

சர்க்கரை-3/4 கப்.

வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.

தயிர்-2 தேக்கரண்டி.

மைதா-1 ¼ கப்.

கோக்கோ பவுடர்-1/4 கப்.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

பட்டை பவுடர்-1 தேக்கரண்டி.

சாக்லேட்-3/4 கப்.

சுடுதண்ணீர்-1/4 கப்.

சாக்கோ வாழைப்பழ கேக் செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் 2 வாழைப்பழம், சன்பிளவர் ஆயில் ¼ கப், காய்ச்சிய பால் ½ கப், சர்க்கரை ¾ கப், வெண்ணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி, தயிர் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது இதை பவுலில் மாற்றிவிட்டு அத்துடன் 1 ¼ கப் மைதா, ¼ கப் கோக்கோ பவுடர், 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி பட்டை பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும். இப்போது ¼ கப் கொதிக்கிற தண்ணீரை சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளவும்.

¾ கப் சாக்லேட்டை கட் செய்து சேர்த்துக்கொள்ளவும். சாக்லேட் வேண்டாம் என்றால் வால்நட் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது ஒரு பாக்ஸில் பட்டர் பேப்பர் வைத்துவிட்டு  மாவை அதில் ஊற்றிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து அதில் ஒரு டப்பாவை கவிழ்த்து வைத்து 5 நிமிடம் சூடு பண்ணிய பிறகு மாவை அந்த டப்பாவின் மீது வைத்து மூடிப்போட்டு 45 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

இப்போது கேக்கை ஒருமணி நேரம் ஆறவிட்டு பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான சாக்லேட் வாழைப்பழ கேக் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

நெய் கேக் செய்ய தேவையான பொருட்கள்.

நெய்-50 கிராம்.

பால்-150 கிராம்.

தயிர்-1/4 கப்.

பவுடர் சர்க்கரை-1 கப்.

வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி.

மைதா-1 ¼ கப்.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ரோஸ்மில்க் கேக் - தேங்காய் கேக் செய்யலாமா?
Banana - ghee  Cake recipes

நெய் கேக்  செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 50 கிராம் நெய் மற்றும் 150 கிராம் காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்துவிடவும்.  இப்போது கேக் செய்ய ஒரு பவுலில் ¼ கப் தயிரை நன்றாக அடித்துவிட்டு 1 கப் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொண்டு இத்துடன் 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், 1 ¼ கப் மைதா, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து இதில் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் நெய் பால் கலவையை சேர்த்து கேக் பதத்திற்கு மாவை கலந்துவிட்டுக்கொள்ளவும்.

இப்போது டின் டப்பாவை எடுத்து உள்ளே பட்டர் பேப்பர் வைத்துவிட்டு மாவை ஊற்றிக்கொள்ளவும். இதை வேக வைக்க ஒரு பாத்திரத்தில் கிண்ணம் வைத்து 5 நிமிடம் சூடு பண்ணிய பிறகு டின்னை உள்ளே வைத்து 35 நிமிடம் மிதமான சூட்டில் மூடிப்போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கேக் மேலே 1 தேக்கரண்டி நெய்யை தடவிவிட்டு 30 நிமிடம் கழித்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com