
தேங்காய் இட்லி
தேவை:
புழுங்கல் அரிசி - 4 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
முந்திரிப் பருப்பு 12
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் - தாளிக்க
செய்முறை;
புழுங்கல் அரிசியையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியே ஊறவிட்டு நீரை வடித்து நைசாக அரைக்கவும். உப்பு சேர்த்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய் துருவலை சேர்க்கவும்.
பிறகு நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு , உளுந்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, மாவில் கொட்டி கலக்கவும். மல்லி தழையைச் சேர்க்கவும். பிறகு இட்லி தட்டுகளில் மாவை விட்டு, நீராவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் இட்லி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி வெகு பொருத்தம்.
கருப்பட்டி இட்லி
தேவை:
இட்லி மாவு - 250 மில்லி
கருப்பட்டி - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
பாசிப்பருப்பு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை ஆறவைத்து வடிகட்டி இட்லி மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கலந்து, இட்லிகளாக ஊற்றவும். மேலே வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்த் துருவலைத் தூவி, மூடிவைத்து வேகவிட்டு எடுக்கவும். சுவையான கருப்பட்டி இட்லி தயார்.