குழந்தைகளை குறிவைக்கும் JUNK FOOD விளம்பரங்கள்!

targeting children
Boy eating burger
Published on

தப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் குழந்தைகளை கவரும்படி விதவிதமான படங்களுடன் கண்ணைக் கவரும் வண்ண பாக்கெட்டுகளில் பெரிதும் சந்தைப்படுத்தப்படுகின்றன, குழந்தைகளின் விருப்பங்கள், சுவை மற்றும் பழக்கவழக்கங்களை பாதிக்கும். உணவு விளம்பரம் தரமற்ற உணவை உட்கொள்வதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்

விளம்பரம் என்பது சந்தைப்படுத்துதலுக்கான ஒரு வகையான தகவல் தொடர்பு ஆகும். தயாரிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள விளம்பரங்கள் நமக்கு உதவுகின்றன. இப்போதெல்லாம் இளம் பருவத்தினர் தொலைக்காட்சி, வானொலி, பேனர் மற்றும் இணையதளம் போன்ற பல்வேறு ஊடகங்களில் அனைத்து வகையான விளம்பரங்களையும் பார்க்கிறார்கள்.

எனவே ஊடகங்களின் உதவியுடன் தயாரிப்பாளர்கள் இளைஞர்களை ஜங்க் உணவுகள் மற்றும் பிற பொருட்களை வாங்க வைக்க முயற்சிக்கின்றனர். விளம்பரத்தை ரசிப்பதன் மூலம் பெரும்பாலான இளைஞர்கள் குப்பை உணவை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஜங்க் உணவுகளின் விற்பனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஊக்குவிப்பதில் விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

எங்கள் வீட்டிற்கு எதிராக ஒரு சிறிய கடை உள்ளது. அங்கு கலர் கலராக சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்க விடப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்முன் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி செல்வது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
குக்கரில் சமைக்க கூடாத உணவுகள்!
targeting children

எங்கள் வீட்டில் பணிபுரிபவர் வேலை செய்ய வரும்போது தன் சிறு வயது குழந்தையையும் உடன் அழைத்து வருவார். ஒருநாள் அவள் குழந்தை தொடர்ந்து அழுது அடம்பிடிக்க அவளிடம் காரணத்தைக் கேட்டேன். ஒரு சிப்ஸ் பிராண்டின் பெயரைச் சொல்லி ‘அதுதான் வேண்டும்’ என அடம் பிடிக்கிறாள் என்றாள். குழந்தைக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு “அதான் டிவில வருதே” என்கிறாள்.

உணவு சந்தைப்படுத்தல் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் உணவு மற்றும் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.  

குழந்தைகள் மிகவும் அக்கறை காட்டும் விஷயங்களை ஜங்க்-ஃபுட் விளம்பரங்கள் பயன்படுத்துகின்றன. பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு பலவிதமான ஜங்க் ஃபுட் பொருட்களை தாங்கள் சொன்ன வேலையை குழந்தைகள் செய்து முடித்தால் அவர்களை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு வெகுமதியாக வழங்குகிறார்கள். இதை மாற்றி குழந்தைகளுக்கு பயனுள்ள வேறு பொருட்களைப் பரிசாகத் தரலாமே.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரையும் இந்த ஜங்க் ஃபுட் குப்பையை உட்கொள்வதை நோக்கித் தள்ளும் மற்றொரு காரணம் விலை காரணி. உதாரணமாக ஒரு சிப்ஸ் பாக்கெட் ரூ .10 (ரூ .5 கூட) க்கு மலிவாக வருகிறது. இந்த உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றை எளிதாக வாங்குவது பரவலாக உள்ளது. ஜங்க் ஃபுட் விளம்பரங்கள் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை.  

இதையும் படியுங்கள்:
தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டால்..? -அசத்தலான சமையல் குறிப்புகள்!
targeting children

குழந்தைகளின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதே அவற்றின் முக்கிய நோக்கம். 50% இளைய தலைமுறையினர் ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன, நுகர்வோரைக் எவ்வாறேனும் கவர  விளம்பரங்கள் வேட்டையாடுகின்றன. இங்கே தூண்டில்: மலிவான விலையில் சுவையான உணவைப் பெறுங்கள். என்பதுதான். இதில் வீழ்வது நடுத்தர வர்க்க குடும்பங்களே.

கவர்ச்சிகரமான தின்பண்டங்கள் மற்றும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள் அவற்றின் நுகர்வுக்கு அடிமையாகும் அப்பாவி குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் போதையாக மரணம்வரை கூட கொண்டு செல்லலாம். தங்கள் குழந்தைகளின் ஆரோக்கிய கேடுக்கு காரணமாக பெற்றோர்கள், முறையற்ற / தரம் குறைந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ததாக கம்பெனிகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

இந்த ஜங்க் ஃபுட் விளம்பர மாயையிலிருந்து மீள முதலில் பெற்றோர்கள் ஜங்க் ஃபுட் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சத்துள்ள உணவுகளை வாங்குவதிலும், வீட்டில் ஆரோக்கியமான உணவை சமைப்பதிலும் கவனம் செலுத்தலாம். பழங்கள், நட்ஸ் அல்லது பாப்கார்ன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை மாற்றாக அவர்களுக்கு வழங்கலாம்.

டிவி திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் அதிக குப்பை உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது குப்பை உணவு நுகர்வை குறைக்க உதவும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,  எனவே பெற்றோர்கள் நல்ல நடத்தையை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்குவது முக்கியம். நுகர்வு முறைகள் குறித்து விழிப்புடன் இருப்பது புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com