healthy recipes
healthy recipesImage credit - youtube.com

தேங்காய் லட்டு, உலர் பழங்கள் லட்டு மற்றும் பூரி லட்டு வகைகள்!

Published on

தேங்காய் லட்டு  

தேவை;

தேங்காய் துருவல் _2 கப்

பொடித்த வெல்லம்_ 1கப்

பாசிப்பருப்பு _3 ஸ்பூன்

ஏலத்தூள் 1/2 ஸ்பூன்

நெய்   _ தேவைக்கு

செய்முறை

முதலில் கனமான கடாயை சூடாக்கி  தீயை குறைத்து வைத்து  தேங்காயை சேர்த்து அடிக்கடி கிளறி தேங்காயை 4 முதல் 5 நிமிடங்கள் ஈரப்பதத்தை போக்க வறுத்து எடுக்கவும். பின்னர் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கரகரப்பாக திரித்து தேங்காய் உடன் சேர்க்கவும். அத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து  நன்றாக கிளறவும். இடைவிடாமல் கிளறி தேங்காய் வெல்லம் கலவையை சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் சமைக்கவும். வெல்லம் உருகி கலவை சிறிது கெட்டியாகும். அதிக நேரம் சமைத்தால் லட்டுகள் கடினமாகிவிடும்.

இறுதியாக கலவையை சிறிது கையில் எடுத்து சிறிது ஆறிய பிறகு லட்டுவாக உருட்டி பார்க்கவும். எளிதாக உருட்ட முடிந்தால் லட்டு கலவை தயார். அடுப்பை அணைத்து விட்டு, கடாயை இறக்கி ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முழுமையாக ஆற விடவும். பின்னர் உள்ளங்கையில் சிறிது நெய் தடவிய நடுத்தர அளவிலான கலவையை எடுத்து நேர்த்தியான உருண்டைகளை உருவாக்கவும். நெய்க்கு பதிலாக எண்ணெய் பயன்படுத்தலாம். அவற்றை காற்று புகாத கொள்கலனில் சேமித்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த அளவுகளில் செய்தால் சுமார் 12 லட்டுகள் செய்யலாம்.

உலர் பழங்கள் லட்டு

தேவை:

நறுக்கிய பேரிச்சம்பழம் _1 கப்

உலர்ந்த அத்திப்பழம் _8

பாதாம் _3 ஸ்பூன்

முந்திரி _2

 உலர்ந்த திராட்சை _2 ஸ்பூன்

உலர்ந்த தேங்காய் துண்டுகள் _3 ஸ்பூன்

பச்சை ஏலக்காய் _2

செய்முறை:

ஒரு வாணலியில் குறைந்த தீயில் பாதாமை வறுத்து தனியாக வைக்கவும். அத்தி பழத்தை நறுக்கவும். ஏலக்காயை கல்லில் நசுக்கி தோலை அகற்றவும்.

பின்னர்  ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பேரிச்சம் பழம், அத்திப்பழம், திராட்சை, முந்திரி, உலர்ந்த தேங்காய் மற்றும் நசுக்கி வைத்து ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்த பாதாம் பருப்பையும் சேர்க்கவும். கரடு முரடான கலவையாக அரைத்து ஒரு தட்டில் பரப்பவும்.

பின்னர் கைகளில் எடுத்து சிறிய உருண்டைகளை உருவாக்கவும். உலர் பழ லட்டு தயார். லட்டுவை உடனடியாக பரிமாறவும். அல்லது காற்று புகாத கொள்கலனில் சேமித்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும். தினமும் ஒரு லட்டு சாப்பிட்டால் சத்தாகவும் ஆரோக்கிய மாகவும், சுவையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெல்வது என்றால் என்ன?
healthy recipes

பூரி லட்டு

தேவை:

பாம்பே ரவை _1 கப்

உப்பு _1சிட்டிகை

நெய் _ பொரிக்க தேவையான அளவு

ஏலத்தூள்  _1 ஸ்பூன்

வெல்லப்பொடி_ பூரித்தூள் அளவு

செய்முறை:

பாம்பே ரவையில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடைசியில் கையில் ஒட்டாமல் வர சிறிது நெய் கையில் தடவிக் கொண்டு பிசையலாம். இப்படி பிசைந்ததை ஒரு சுத்தமான ஈர துணியில் சுற்றி குறைந்தது 21/2 மணி நேரம் ஊற விடவும்.

21/2 மணி நேரம் கழித்து மாவை மீண்டும் கையால் அழுத்தி அழுத்தி பிசைய மாவு மிருதுவாக வரும். இதை சின்ன பூரிகளாக இட்டு மேலே அங்கங்கே ஒரு Fork ஆல் குத்தி நெய்யில் பொரிக்கவும். Fork கொண்டு குத்துவதால் பூரி  உப்பாமல் கரகரவென்று பொரிந்திருக்கும்.

பொருந்த பூரிகளை சிறிது சூடு ஆற ஆற கையாலேயே நொறுக்கி கொள்ளவும். இப்படி நொறுங்கிய பூரித்தூள் அளவில் வெல்லத்தூள் மற்றும் ஏலத்தூள் சேர்த்து லட்டாக பிடிக்கவும். மிகவும் சுவையான பூரி லட்டு தயார்.

logo
Kalki Online
kalkionline.com