வெல்வது என்றால் என்ன?

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

நான் போகும் இடம் எது என்று தெரியாவிட்டால் எந்த பாதையை தேர்வு செய்தாலும் பலன் இல்லை. வெற்றி பெறுவது என்பது எளிதல்ல. வெல்வது என்பது என்ன? என்று வினவினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை கூறுவதை கேட்கலாம்.

ஒருவருக்கு பணியை செய்வது வெற்றியாக இருக்கும். இன்னொருவருக்கு பணியே செய்யாமல் இருப்பது வெற்றியாக இருக்கும். குறிப்பிட்ட செயலை செய்யும் போது ஏற்படும் உற்சாகமான களிப்பு குறிப்பிட்ட இலக்கை அடையும்போது ஏற்படும் மனமகிழ்ச்சி குறிப்பிட்ட போட்டியில் முதலாவதாக வந்து பரிசு பெறும்போது ஏற்படும் குதூகலம் இவை அனைத்தும் வாழ்வில் நாம் அனுபவிக்கும் வெற்றிகளே.

நினைத்த செயலை நினைத்தவாறு செய்து முடிப்பது வெற்றி. எடுத்த காரியத்தை மற்றவர்களை விட சிறப்பாக செய்வது வெற்றி. குறிப்பிட்ட செயலை குறிப்பிட்ட வகையில் செய்யும் போது மகிழ்ச்சி ஏற்பட்டால் அது வெற்றி. இருக்கும் நிலையை விட அடுத்த நிலைக்கு உயர்வது வெற்றி  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எதிர்பார்த்த முறையில் நிர்ணயித்த இலக்கினை எட்டுவது வெற்றி. தனிப்பட்ட நிர்வாக பொருளாதாரம் உயர்வுகளை எட்டுவது வெற்றி. போட்டியில் கலந்து கொண்டு முயற்சி செய்து சக போட்டியாளர்களை தோற்கடிப்பது வெற்றி.

ஆனால் வாழ்க்கையின் பெரும்பாலான போட்டிகளில் நாமே நமக்கு போட்டியாளராக இருக்கிறோம். நம்முடைய நிலை உயர்வது வெற்றியானால் நம்முடைய போட்டியாளர் வேறு யாருமில்லை. நாமே நமக்கு போட்டியாளராக மாறும்போது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாறிவிடும் .வெற்றி பெற வைக்கும் வாய்ப்புகள் தினம் தினம் வாழ்வில் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக செலவினை குறைத்து பணத்தை சேமிக்கும் போது இருக்கும் நிலையை விட செல்வம் சேருகிறது இதுவும் நம் வெற்றியாக மாறிவிடுகிறது.

மற்றவர்களை தோற்கடிப்பதையே வாழ்வின் மிகப்பெரும் வெற்றியாக பலர் எண்ணுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெற இதர போட்டியாளர்களை விட நாம் சிறந்து விளங்க வேண்டியது முக்கியமாகிறது. மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்களானால் நாம் வெல்வது கடினம் ஆகிறது. இதர போட்டியாளர்களுடன் நாம் சிறந்து விளங்கினால் நாம் வெற்றி பெற்று விடுகிறோம். அத்தகைய  வெற்றிகளால் நாம் வளர்வதில்லை. நாம் இருக்கும் நிலையை விட எந்த அளவு முயற்சி செய்கிறோமோ அந்த அளவு தான் வளர்கிறோம்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக் கனியை சுலபமாக பறிக்க 5 வழிகள்!
motivation article

இந்த வளர்ச்சிதான் உண்மையான வெற்றி. பணம் , புகழ், செல்வாக்கு அதிகாரம், நற்பெயர் உயர்ந்த பொறுப்பு ஆகியவற்றை பெறுவதால் மட்டும் வெற்றி பெற்றவராக நாம் மாற முடியாது. இவற்றை பெறும்போது மனமகிழ்ச்சி ஏற்பட்டாலும் இவற்றின் மூலம் நம் முன்னேற்றம் அடைந்தால்தான் அது வெற்றியாகும்  இதனால் தான் தவறான முறையில் செல்வம் சேர்த்தால் அதை வெற்றியாக கருத முடியாது.

வாழ்க்கையில் பல தகுதிகள் உள்ளன. குடும்பம், நட்பு, தொழில், தனிப்பட்ட வாழ்வு செல்வம் என பல்வகை தேவைகள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. சிலர் இந்த பகுதிகள் அனைத்திலும் அக்கறை கட்ட தவறி விடுகின்றனர். தங்கள் பணியில் வெற்றியாளராக வலம் வரும்போது தங்கள் குடும்ப வாழ்வில் கோட்டை விட்டுவிடுகின்றனர். தேவையான அளவு வாழ்வின் எல்லா பகுதிகளிலும் வெற்றிகரமாக திகழ்கிறவர்களே இறுதியில் வெற்றியாளர் ஆகின்றனர். பலர் தங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வெற்றியின் அளவுகோலாக கருதுகின்றனர் அவர் தனி மரத்தை காடு என்று எண்ணுகின்றனர் என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com