

கோக்கனட் ஸ்வீட் க்ரஞ்ச் ரோல் (Coconut Sweet Crunchy Roll)
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
வெள்ளை ரவை – 1 ஸ்பூன்
கடலை மாவு – 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 கப்
பொடித்த வேர்க்கடலை – 1 கப்
பொடித்த வெல்லம் – ½ கப்
முந்திரி – 10 Nos
திராட்சை – 10 Nos
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
மைதா மாவு – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பொடித்த வேர்க்கடலை, முந்திரி, திராட்சை சேர்த்து பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய் துருவலை போட்டு லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கலவையில் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்துவைக்கவும். கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ரவை சேர்த்து பிசைந்து, சிறிது கனமான சப்பாத்திகளாக உருட்டவும்.
மைதாமாவை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் குழைத்து வைக்கவும். சப்பாத்தியில் தேங்காய் கலவையை வைத்து மெதுவாக ரோல் செய்து, முனைகளை மைதா பேஸ்டால் ஒட்டவும்.
காய்ந்த எண்ணெயில் ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ஒரு தட்டில் வெட்டி வைத்து அதன் மீது தேன் ஊற்றி பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் ரோல் (Sweet Corn Roll)
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
வெல்லப் பொடி – ½ கப்
வெள்ளரி விதைகள் – 1 கப்
பொடித்த முந்திரி, பாதாம் – 1 கப்
கோதுமை மாவு – 2 கப்
வெள்ளை ரவை – 1 ஸ்பூன்
கடலை மாவு – 1 ஸ்பூன்
மைதா மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம், வெள்ளரி விதைகளை போட்டு பொரித்து எடுக்கவும். கோதுமை மாவு, ரவை, கடலை மாவு சேர்த்து சப்பாத்தி மாவுபோல பிசைந்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.
பிறகு அதில் பொரித்த பருப்பு கலவையின் பாதி அளவையும், வெல்லப் பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி அதில் ஸ்வீட் கார்ன் கலவையை வைத்து மெதுவாக ரோல் செய்யவும். மைதா பேஸ்ட் கொண்டு முனைகளை ஒட்டவும். காய்ந்த எண்ணெயில் ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒரு தட்டில் வெட்டி வைத்து அதன் மீது மீதமுள்ள முந்திரி, வெள்ளரி விதைகள் தூவி சூடாக பரிமாறவும்.
பனீர் ஸ்வீட் ரோல் (Paneer Sweet Roll)
தேவையான பொருட்கள்:
பனீர் துருவல் – 1 கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா – 1 கப் (பொடித்தது)
வெல்லம் – ½ கப்
சப்பாத்தி மாவு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தாவை லேசாக வறுக்கவும். அதனுடன் பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி, பின்னர் வெல்லம் சேர்த்து கலந்து வைக்கவும்.
சப்பாத்தி மாவை உருட்டி அதில் பனீர் கலவையை வைத்து ரோல் செய்யவும். முனைகளை மைதா பேஸ்டால் ஒட்டி, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இரண்டாக வெட்டி தட்டில் வைத்து சூடாக பரிமாறவும்.