சுடச்சுட 'சாதம் குழம்பு' - கொங்கு மக்களின் பிரியமான பருப்பு சாதம்!

 lentil rice
The lentil rice of the Kongu people
Published on

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 2 டம்ளர்

கடலை எண்ணெய் - தேவையான அளவு 

துவரம் பருப்பு - 1/2 டம்ளர்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 2 

சிறிய வெங்காயம் - 2 கைப்பிடி அளவு

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மிளகாய் வற்றல் - 4

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1சகட்டிகை

கறிவேப்பிலை - 2 கொத்து

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு 

பூண்டு - 10 பல்

தேங்காய் - 4 துண்டு

நெய் - 1 கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு  எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், பட்டை தாளித்து, சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கியதும், பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்றாக வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

இதையும் படியுங்கள்:
பருப்புச் சட்னியுடன் அருமையாக இருக்கும் அரிசி உப்புமா ரெசிபி!
 lentil rice

நன்றாக கொதித்தவுடன் பருப்பு சேர்த்து பாதி வெந்ததும், அரிசியை போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வேகவிட்டு, பூண்டு, தேங்காயை சேர்க்கவும். 

தண்ணீர் நன்றாக வற்றும்போது சாதம் முழுமையாக வெந்த பதத்தில் நெய், கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும்.

சுவையான கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம் ரெடி. இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com