பருப்புச் சட்னியுடன் அருமையாக இருக்கும் அரிசி உப்புமா ரெசிபி!
அரிசி உப்புமா
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி அல்லது பச்சரிசி – 500 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
தேங்காய் துருவல் – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்வற்றல் – காரத்திற்கு ஏற்ப
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
புதினா இலை – சிறிதளவு (விருப்பத்தேர்வு)
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவி நன்கு காயவைத்து வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்த அரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து வைக்கவும். அதே வாணலியில் துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும்.
வறுத்த பருப்புடன் தேங்காய் துருவல், மிளகாய்வற்றல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும் நீரில் அரைத்த அரிசி ரவைபோல் சேர்த்து, உப்பும் போட்டு நன்கு கலக்கவும்.
அரிசி மாவு இட்லி மாவு பதத்திற்கு வந்ததும், கொஞ்சம் கெட்டியாக இருக்கும்போது எடுத்து இட்லி தட்டில் போட்டு ஆவியில் வேகவைக்கவும். வேகவைத்த இட்லிகளை நன்கு உதிர்த்து ஆறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும். அதனுடன் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின், உதிர்த்த இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். இறக்கும்போது புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சூடான அரிசி உப்புமாவை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்!
பருப்புச் சட்னி
துவரம் பருப்பு. ½ கப்
கடலைப்பருப்பு ½ கப்
உளுந்துப் பருப்பு 1 கப்
சீரகம் மிளகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 No
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பருப்புகளை நன்கு தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி எடுத்துக்கொண்டு வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உலர்த்தி எடுத்துள்ள பருப்புகளை போட்டு நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
பிறகு அதனுடன் சீரகம், மிளகு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து நன்கு கிளறிவிட்டுப் பிறகு இறக்கி ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு கொற கொறப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான பருப்புச் சட்னி ரெடி!

