
சேனைக்கிழங்கு சுண்டல்கறி
செய்ய தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு ஒரே சீராக நறுக்கி வேகவைத்த துண்டுகள்- ஒரு கப்
கருப்பு சுண்டல் ஊறவைத்து அவித்தது -ஒரு கப்
தேங்காய்த் துருவல்- அரை கப்
சீரகம் -ஒரு டீ ஸ்பூன்
கருவேப்பிலை -இரண்டு ஆர்க்கு
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் அரிந்தது- ஒன்று
தக்காளி அரிந்தது -ஒன்று
தாளிக்க- எண்ணெய், கடுகு, தனியா விதை
உப்பு -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
தேங்காய் ,சீரகத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, கடைசியில் கறிவேப்பிலையை நச்சி எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் சுண்டல் வேகவைத்த சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சாம்பார் பொடி உப்பு போட்டு நன்றாகக் கிளறி வேகவிடவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்கிளறி ஒரு கொதி விட்டு பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும். இதை எதனோடு சேர்த்து சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.
வெஜிடபிள் பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா- ஒரு கப்
வெந்தயம் -ஒரு டீஸ்பூன்
உளுந்து- இரண்டு கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கேரட் ,பீன்ஸ் எல்லாமாக சேர்த்து வதக்கியது- அரை கப்
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
செய்முறை:
அரிசிகள், உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கழுவி, ஊறவைத்து, அரைத்து புளிக்கவிடவும். முக்கால் திட்டம் புளித்ததும் அதனுடன் வதக்கி வைத்திருக்கும் வெஜிடபிளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து பணியாரக் குழிகளில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, இருபுறமும் நன்றாக வேகவிட்டு, பணியாரங்களாக எடுத்து வைக்கவும். அப்படியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும். விருப்பப்பட்ட சட்னியுடன் சாப்பிடலாம் ருசியைக் கூட்டித்தரும்.