

துவட்டலோ, குழம்போ செய்யும்போது வெங்காயத்தை சேர்ப்போம். அதை மூடி வைத்து வதக்க விரைவில் வதங்குவதோடு பொன்னிறமாகும் இருக்கும்.
அசைவ ரெசிப்பிகளுக்கு வெங்காயத்தை வறுத்து மேலே அலங்கரிப்பதுபோல சைவ சமையலுக்கும் கிரிஸ்பாக வெங்காயத்தை வதக்கி புலாவ், பிரியாணி, குருமாக்கள் மேலே தூவி இறக்க சுவை அதிகரிக்கும்.
மராட்டி மொக்கு, அன்னாசி பூ வை தாளிக்க அப்படியே போடுவதை விட இலேசாக வறுத்து விட்டு பொடியாக்கி தாளிக்க சுவை அதிகரிப்பதோடு, கொஞ்சம் சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்.
பீட்ரூட் சூப் செய்யும்போது தக்காளி சேர்த்து வேகவிடவும். பின் பார்லி வெந்த தண்ணீர் சேர்த்து மசித்து தாளித்து பரிமாற திக்கான சூப் சுவையாக இருக்கும்.
தேங்காய் போளி, பருப்பு போளி செய்து போரடித்து விட்டால் நட்ஸ் பூரணம், கேரட், கோவா வெல்லம் சேர்த்து செய்த பூரணம் என செய்ய சுவையாக இருக்கும்.
அப்பளத்தை சுடும்போது நெய் மேலாக தடவி சிறிது கொரகொரப்பாக நணுக்கிய மிளகுத்தூள் தூவிசுட சுவை நன்றாக இருக்கும்.
பருப்பு துவையல் அரைக்கும்போது கொள்ளு சேர்த்து கலந்து வறுத்து அரைக்க வாசனையாக இருக்கும்.
தண்ணீரை ஐஸ் கட்டிகள் தயாரிக்க வைக்கும்போது தண்ணீருடன் புதினா ஜுஸ், இஞ்சி ஜுஸ், உப்பு சேர்த்து ஊற்றி வைத்து பின் ஜுஸ் தயாரிக்க சுவையாக இருக்கும்.
புட்டிங், பாப்ஸிகள் போன்றவை தயாரித்து அச்சுகளில் ஊற்றும் முன் வெண்ணெய் தடவி ஊற்றி பின் செட் ஆனதும் எடுக்க சுலபமாக எடுக்க வரும்.
பூண்டை நேர் வாக்கில் அரிய சுலபமாக அரியலாம்.
முட்டைக்கோஸ், முள்ளங்கி செய்யும்போது தண்டையும் உபயோகிக்க சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு பின் சமைக்க காரமில்லாததோடு அல்சர் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
புளியோதரை செய்யும்போது சிறிது சுக்குப் பொடி, மிளகு, வறுத்த எள் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து செய்ய சுவையாக இருக்கும்.
எந்தவித பஃர்பி செய்யும் போதும் மில்க் பவுடர், கோவா, பொடித்த சர்க்கரை, வறுத்த கடலைமாவு சேர்த்து கலந்து கெட்டியாக நுரைத்து வந்ததும் இறக்க சுவை அதிகரிக்கும்.
ஓட்ஸ் ஸை கஞ்சியாக குடிப்பதைவிட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து செய்ய சுவையாக இருக்கும்.
