கோடையில் சூட்டை தணிக்கும் ஜவ்வரிசி பதார்த்தங்கள்- 3

ஜவ்வரிசி அதிரசம்
ஜவ்வரிசி அதிரசம்

ஜவ்வரிசி அதிரசம்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி _100 கிராம் ரவை _1 கப் வெல்லம் _100 கிராம் எண்ணெய் _1/2 லிட்டர் தேங்காய் _1/2 மூடி ஏலக்காய் தூள் _1 ஸ்பூன் உப்பு _ சிறிது

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை சிறிது உப்பு சேர்த்து பிசையவும். அத்துடன் ரவை சேர்த்து மிகவும் கெட்டியாக பிசையவும். தேங்காயை பூ போல துருவி கொள்ளவும். வெல்லத்தை சீவி அத்துடன் ஏலக்காய் தூள் சேர்த்து ஜவ்வரிசி கலவையுடன் சேர்த்து பிசையவும். அப்போது அதிரச மாவு பக்குவத்தில் வரும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு துண்டு வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து அதிரசம் போல் தட்டவும். அதை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அது சிவந்து அதிரசம் போல் உப்பி வரும். உடனே திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

ஜவ்வரிசி வடை:

ஜவ்வரிசி வடை
ஜவ்வரிசி வடைImage credit - youtube.com

தேவையான பொருட்கள்:

மாவு ஜவ்வரிசி _ 1 கப் சின்ன வெங்காயம்_6 பச்சைமிளகாய் _ 1 மல்லி தழை _ சிறிது கடலைமாவு _ 2 ஸ்பூன் சிறிய உருளைக்கிழங்கு _2 இஞ்சி _சிறு துண்டு சீரகம் _1/4 ஸ்பூன் உப்பு _தேவைக்கு

செய்முறை:

ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியதும் சல்லடையில் ஊற்றி தண்ணீரை ஒட்ட வடித்து விட வேண்டும். இத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், மிளகாய், மல்லி கீரை, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் கடலைமாவு சேர்த்து விட்டு, உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து சேர்த்து நன்கு விரவி உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி வைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!
ஜவ்வரிசி அதிரசம்

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் தட்டி வைத்த வடைகளை போட்டு சி வந்ததும் மாற்றி போட்டு எடுக்கவும். சூப்பர் சுவையில் மொறு,மொறு என்று ஜவ்வரிசி வடை ரெடி.

ஜவ்வரிசி கேசரி :

ஜவ்வரிசி கேசரி
ஜவ்வரிசி கேசரிImage credit - youtube.com

ஜவ்வரிசி _1/4 கிலோ நெய் 1/4 கப் முந்திரி பருப்பு _15 கிஸ்மிஸ் _15 குங்குமப்பூ _1 கிராம் ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன் சர்க்கரை _150 கிராம்

செய்முறை:

ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஊறிய பிறகு சல்லடை யில் போட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். ஊற வைத்த ஜவ்வரிசியை ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது 2 ஸ்பூன் நெய் விடவும். ஜவ்வரிசி கொதித்து மேல் வரும் போது ஒரு கண் அகப்பையை வைத்து அரித்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் போட்டு அதில் 2 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து விடவும்.

அதே வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் போட்டு பொரிந்து வரும்போது ஜவ்வரிசியை அதில் போட்டு நன்கு கலந்து விடவும். பின் அதில் குங்குமப்பூபோடவும். பின்னர் சர்க்கரை போட்டு நன்கு கலந்து கிண்டி கொடுக்கவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு கலந்து கிண்டவும் சுருண்டு வரும் போது இறக்கி விடலாம். இது வித்தியாசமாக மிகவும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com