தீபாவளிக்கு ஈசியா செய்ய சோளமாவு பிஸ்கட்டும், வரகரிசி தட்டையும்!

Deepavali special recipes
Deepavali recipes
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

சோளமாவு ஸ்வீட் பிஸ்கட்

தேவையானவை:
சோள மாவு ஒரு கப்
கோதுமை மாவு - அரைக்கப் நாட்டுச்சக்கரை - முக்கால் கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
சோள மாவுடன் சலித்த கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும்.நாட்டு சக்கரையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அடித்து பொடியாக்கி எடுக்கவும். மாவு கலவையில் சிட்டிகை உப்புடன் அரைத்த நாட்டு  சர்க்கரையை சேர்த்து கலந்து சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். மாவை சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்தி கல்லில்  சிறிது தடிமனாக வட்டமாக தேய்க்கவும் . அவற்றை டைமன் வடிவில் கத்தியால் துண்டுகளாக்கி தட்டத்தில்  தனித்தனியே பரத்தவும்.

வாணலியில் தேவையான எண்ணெயைக் காயவிட்டு நறுக்கிய துண்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதில் சிறிது வெள்ளை எள் அல்லது ஓமம் மேலே தூவலாம் அது அவரவர் சாய்ஸ்.

வரகு அரிசித் தட்டை

தேவையானவை:
வரகு அரிசி- ஒரு கப்
பொட்டுக்கடலை -அரை கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப் மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
கருவேப்பிலை -சிறிது
பூண்டு - ஆறு பற்கள்
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
உப்பு தேவைக்கு

இதையும் படியுங்கள்:
அல்வாவை மிஞ்சும் செட்டி நாடு ஸ்பெஷல் ஸ்வீட்!
Deepavali special recipes

செய்முறை:
வரகு அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சலித்து வைக்கவும். கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை வடித்து உப்பு, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து  கெட்டியாக அரைத்து எடுக்கவும். ஆட்டிய வரகு அரிசிமாவுடன் பொட்டுக்கடலைமாவு, ஊறிய கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், பொடிப்பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு பிசையவும். நீர் தெளிக்கும் போது மிக கவனம் தேவை. மாவு வெகுவாக தளர்ந்து விடக்கூடாது. இப்போது மாவை எடுத்து சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி வாழை இலை அல்லது தட்டின் பின்னால் எண்ணெய் தடவி  தட்டைகளாக தட்டவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் தட்டைகளை போட்டு இரு பக்கமும் சிவக்க திருப்பிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து ஆறியதும் உடனே காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இது சாப்பிட மிகவும் சுவையான சத்துள்ள காரத் தட்டையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com