
தேவையான பொருட்கள்;
பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
தக்காளி - ஒன்று
சிறிய வெங்காயம் -10
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை - ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை;
கத்திரிக்காய்களை கழுவி, காம்பு பகுதியை நீக்கி விட்டு, நீளவாக்கில் நான்காக அரிந்துகொள்ளவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது முதலியவற்றை தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் காயவைத்து அவற்றை பொரித்து எடுக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, பொரிந்ததும் கருவேப்பிலை, வெட்டி வைத்த தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். பொரித்து வைத்த கத்திரிக்காய் களையும் போட்டு வதக்க வேண்டும்.
நிலக்கடலையை தோல் உரித்து மத்து கொண்டு அவற்றை சிறியதாக பொடித்துக்கொள்ளவும். அதைக் கத்தரிக் கலவையின் மீது தூவி இரண்டு நிமிடம் கிளறவும். பின் கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும். சுவையான கத்திரிக்காய் ஃப்ரை ரெடி (Crispy fried eggplant). இது தயிர் சாதம், துவரம்பருப்புக் கடையலுடன் சாப்பிட ஏற்றது.