மஞ்சள் பூசணிக்காய் கூட்டு: சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!

Rich in nutrients Yellow Pumpkin
Yellow Pumpkin kootu Recipe
Published on

யற்கையாகவே மஞ்சள் பூசணியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் இதை விரும்பி சாப்பிடும் அளவுக்கு சுவையாக யாருக்கும் சமைக்கத் தெரிவதில்லை. இந்த பதிவில் மஞ்சள் பூசணியுடன் வேர்க்கடலை சேர்த்து கூட்டு எப்படி செய்வது எனப்பார்க்கலாம். (Yellow Pumpkin kootu Recipe) வேர்க்கடலையிலும் ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இந்த ரெசிபி சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணி - ¼ பகுதி

வறுத்த வேர்க்கடலை - ¼ கப்

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 3 

செய்முறை: 

முதலில் பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவிடுங்கள். அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் பூசணிக்காயிலிருந்தே தண்ணீர் சுரக்கும். 

காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்ததும், அதை வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளுங்கள். 

அதே நேரம் பூசணிக்காய் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடுங்கள். பூசணிக்காய் நன்கு வெந்ததும் அதில் உப்பு சேர்த்து கிளறவும். தொடக்கத்திலேயே உப்பு சேர்க்க வேண்டாம், ஏனெனில் பூசணிக்காய் வெந்ததும் அதன் அளவு குறையும் என்பதால், முதலிலேயே சேர்த்தால் அதிகமாக உப்பு சேர்த்துவிடும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
எளிமையான சாபுதானா கிச்சடி மற்றும் பூல் மக்கானா கீர் செய்முறை!
Rich in nutrients Yellow Pumpkin

இறுதியில் பூசணிக்காய் நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால் மஞ்சள் பூசணிக் கூட்டு தயார். 

இந்த ஆரோக்கிய ரெசிபியை நீங்கள் விரைவாகவே செய்துவிடலாம். எனவே ஒருமுறை இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com