நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

பெப்பர் சிப்ஸ்!
பெப்பர் சிப்ஸ்!india.neelamfoodland.in

பெப்பர் சிப்ஸ்!

தேவை: மைதா மாவு - 1 கப், மிளகுத் தூள் - 2½ டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: சலித்த மாவுடன் உப்பு, காரம், வெண்ணெய் சேர்த்து, நீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்தியாக இட்ட மாவை டைமண்ட் வடிவில் கட் செய்து, எண்ணெயில் பொரிக்கவும்.

- எஸ்.ஆனந்தி சுந்தரராஜன், திருச்சி

 

ஜவ்வரிசி கோளா

தேவை: அரிசி மாவு - 1 கப், வெண்ணெய், எள் - தலா 2 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த ஜவ்வரிசி - 1 கப், உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
பெப்பர் சிப்ஸ்!

செய்முறை: ஊறிய ஜவ்வரிசியை நீரை வடித்து, இதரப் பொருள்களில் சேர்க்கவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, நீளவாக்கில் தேய்த்து இரு முனைகளையும் சேர்த்து வளையமாகச் செய்து பொரித்தெடுக்கவும்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை

 

வெந்தயக் கீரை பகோடா

வெந்தயக் கீரை பகோடா
வெந்தயக் கீரை பகோடாminnambalam.com

தேவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - ½ கப், நறுக்கிய வெங்காயம் - ½ கப், நறுக்கி சுத்தம் செய்த வெந்தயக் கீரை – ¼ கப், மிளகாய்த் தூள் - ¾ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், கீரை மற்றும் மாவுகளோடு உப்பு, காரம் சேர்த்துப் பிசையவும். காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும்.

- பி.சாந்தி, பெங்களூரு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com