நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

ஆந்திரா முறுக்கு
ஆந்திரா முறுக்கு

ஆந்திரா முறுக்கு

தேவை: மைதா - 1 கப், அரிசி மாவு - ½ கப், உப்பு, காரம், பெருங்காயம், ஓமம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: சிறிதளவு தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, ஒன்றாகக் கலந்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, நன்கு பிசையவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும்

- எஸ். சரண்யா, தண்டையார்ப்பேட்டை

ஜவ்வரிசி முத்துத்தட்டை

தேவை: பச்சரிசி - 200 கிராம், பெரிய ஜவ்வரிசி - 50 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, வெண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், ஓமம் - ½ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: அரைமணி நேரம் ஊறிய ஜவ்வரிசியோடு மாவுகள் மற்றும் இதரப் பொருள்களைச் சேர்த்து தேவைக்கு நீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிளாஸ்டிக் பேப்பரில் வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும்.

- அமுதா ஞானசேகர், திருநின்றவூர்

நவதானிய வறுபயிறு

தேவை: காராமணி, கொண்டைக் கடலை, கொள்ளு, மொச்சை, பச்சைப் பயறு, எள், அவல் - தலா 100 கிராம், துண்டாக்கிய தேங்காய்க் கீற்று - 1 கப், காரத்தூள்  - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!
ஆந்திரா முறுக்கு

செய்முறை: ஒருநாள் இரவு ஊறிய தானியங்களைத் தனியாகக் காயவைத்து வாணலியில் வறுக்கவும். தேங்காயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக்கி மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும்.

- பி.எஸ்.ராணி, மதுரை

ரவை முறுக்கு
ரவை முறுக்கு

ரவை முறுக்கு

தேவை: ரவை - 1 கப், புளித்த தயிர் – ¼ கப், சின்ன வெங்காயம் - 5,
பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, கடுகு - ½ டீஸ்பூன், பெருங்காயம், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை விழுதாக்கி நெய்யில் வறுத்த ரவையுடன் சேர்க்கவும். ரவை, உப்பு, விழுதை தயிரில் சேர்த்துப் பிசைந்து மாவாக்கி, தாளிப்பு பொருள்களை வளையமாகச் செய்து காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.

- எஸ். தேவகாந்தி, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com