இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!

அருகுலா கீரை
அருகுலா கீரை

ந்தக் கீரை பார்ப்பதற்கு கடுகு கீரை போலவே இருக்கும். மெல்லியக்காரச்சுவை உடைய இக்கீரையை ராக்கெட் கீரை என்றும் அழைக்கிறார்கள். 

ஆயுர்வேதத்தில் இந்தக் கீரை நிறைய மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. அழகு சாதன தயாரிப்புகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. 

சிறிது கசப்பு சுவையுடன் காணப்படும் இக்கீரையில் விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் சி, விட்டமின் ஈ, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, ஜிங்க் என ஏகப்பட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இதில் அயோடின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதுடன் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.

வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி இக்கீரைக்கு உண்டு.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி புரிகிறது.

பொடுகு தொல்லையை போக்கவும், வழுக்கை விழாமலும் தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் கூட இக் கீரையை சாலட் வடிவிலோ, சூப்பாக செய்தோ சாப்பிடலாம். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் தாய் மற்றும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
அருகுலா கீரை

அருகுலா கீரையை புதினாவுடன் சேர்த்து பேஸ் பேக்காக போட பருத்தொல்லைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் கண்டிஷனர்கள் தயாரிப்பிலும் இந்த அருகுலா கீரை பயன்படுத்தப் படுகிறது.

விட்டமின் கே, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது நம் இதயத்தை பலப்படுத்துகிறது.

ஒரு சில ஆய்வுகளில் இது உடலில் கேன்சர் பாதிப்புகளை உருவாக்கக் கூடிய செல்களை அழிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு சத்து மிகுந்த இந்தக் கீரையை மசியலாகவோ, சாலட்டாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com