நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடாImage credit - youtube.com

புழுங்கலரிசி ரிப்பன் பக்கோடா

தேவை: புழுங்கலரிசி - ½ கிலோ, கடலை மாவு - 200 கிராம், மிளகாய் வற்றல் -10, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: ஊறவைத்த அரிசியில், உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். அதில் கடலை மாவைச் சேர்த்துப் பந்தாகப் பிசையவும். ரிப்பன் நாடா அச்சில் மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- பேபி மீனா, உத்தங்குடி

 

வெஜிடபிள் பக்கோடா

தேவை: பீன்ஸ், காரட், வெங்காயம், தலா ½ கப், கோஸ், கொத்துமல்லி கடலை மாவு - 1½ கப், அரிசி மாவு - ½ கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவைக்கு, இஞ்சி- சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் பிரச்னைகளை தடுக்கும் பச்சைக் காய்கறி!
ரிப்பன் பக்கோடா

செய்முறை: சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிய காய்களோடு, மாவுகள், வெண்ணெய், மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்துப் பிசிறவும். காய்ந்த எண்ணெயில் பக்கோடாவாகக் கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும்.

- ஜானகி பாலசுப்ரமணியன், சென்னை

மசாலா கேஷு

தேவை: முழு முந்திரி - ¼ கிலோ, மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி, கரம் மசாலா - 2 சிட்டிகை, மாங்காய்த்தூள் - 1 சிட்டிகை, உப்பு, நெய் - தேவைக்கு.

செய்முறை: நெய்யில் பொரித்த முந்திரியுடன் மற்றப் பொருள்களைச் சேர்த்து, நன்கு பிசிறி வைக்கவும். தேவைக்கு கறிவேப்பிலையையும் வறுத்துப் போடலாம்.

- வே.தனசேகரன், திருவண்ணாமலை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com