வெள்ளரிக்காய் சப்பாத்தி செய்யலாம் வாங்க! 

Cucumber chapati Recipe
Cucumber chapati Recipe

ப்பாத்தி என்றாலே எப்போதும் கோதுமை மாவைப் பயன்படுத்தி ஒரே விதமாக மட்டுமே செய்து வெறுத்துவிட்டதா?

மேலும் இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால் போதும் வித்தியாசமான சுவையில் தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிடும்படியான வெள்ளரிக்காய் சப்பாத்தி செய்யலாம். இப்படி செய்தால் இரண்டு சப்பாத்தி சாப்பிடுபவர்களும் மூன்று நான்கு என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 2 கப் 

வெள்ளரிக்காய் - ¼ கிலோ 

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கரம் மசாலா - ½ ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

சீரகத்தூள் - ½ ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் வெள்ளரிக்காய் மற்றும் பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இஞ்சியை தோல் சீவி, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொத்தமல்லி கருவேப்பிலை, சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ஹேர் டையில் நல்ல ஹேர் டை என்று எதுவுமே இல்லை!
Cucumber chapati Recipe

இந்த கலவையை வேறு கிண்ணத்திற்கு மாற்றி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அதன் பிறகு அதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்த பிறகு, கோதுமை மாவில் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அரைத்து வைத்துள்ள பேஸ்டிலேயே ஈரப்பதம் அதிகம் இருக்கும். 

பின்னர் பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக அடுப்பில் தோசை கல் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எப்போதும் போல சப்பாத்தி சுடுவது போல சுட்டு எடுக்க வேண்டும். 

இந்த வெள்ளரிக்காய் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குருமாவோ, குழம்போ இன்றி அப்படியே சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com