முழங்கால் மூட்டு வலியைப் போக்கும் வெள்ளரி எள் சாலட் - பிரண்டை தொக்கு!

Cucumber Sesame Salad to Relieve Knee Pain - prandai thokku!
healthy recipesImage credit - youtube.com
Published on

வெள்ளரி எள் சாலட்:

வெள்ளரி ஒன்று 

எள் 2 ஸ்பூன் 

உப்பு தேவையானது 

பச்சை மிளகாய் 1 

வேர்க்கடலை 2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி சிறிது 

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை,

சீரகம், நல்லெண்ணெய்

கருப்பு எள்ளை வெறும் வாணலியில் பொரியும் வரை வறுத்தெடுக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, சீரகம் தாளித்து கடுகு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெள்ளரித் துண்டுகள்,  தேவையான உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி சேர்த்து கடைசியாக வறுத்த எள்ளையும், பொடித்த வேர்க்கடலையையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.

பிரண்டை தொக்கு:

இளம் பிரண்டை கால் கிலோ 

சின்ன வெங்காயம் 100 கிராம் 

பூண்டு 50 கிராம் 

வர மிளகாய் 15 

உப்பு தேவையானது 

புளி எலுமிச்சை அளவு 

வெல்லம் சிறு கட்டி 

பெருங்காயத்தூள்

நல்லெண்ணெய் அரை கப் தாளிக்க கடுகு, வெந்தயத்தூள், கருவேப்பிலை

பிரண்டை நறுக்கும் பொழுது கையில் பட்டால் அரிக்கும். எனவே அவற்றை சுத்தம் செய்யும் பொழுது கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தோல் சீவி, கழுவி சிறு சிறு துண்டகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் எடுத்து தனியே வைக்கவும். பிறகு பிரண்டையை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். மிளகாய் மற்றும் புளியையும் சேர்த்து நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் சிறிது நேரம் ஆறவிட்டு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
ருசியான கொண்டைக்கடலை அடை - கோவக்காய் சட்னி செய்யலாம் வாங்க!
Cucumber Sesame Salad to Relieve Knee Pain - prandai thokku!

வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணையை விட்டு கடுகு, வெந்தயத்தூள் 1/2 ஸ்பூன், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து ஒரு கப் தண்ணீர்விட்டு அடுப்பை நிதானமாக வைத்துக் கிளறவும். பெருங்காயத்தூள் பொடித்த வெல்லம் சிறிது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

ஆரோக்கியமான சுவைமிக்க பிரண்டை தொக்கு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com