இன்றைக்கு சுவையான கொண்டைக்கடலை அடை மற்றும் ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி ரெசிபிஸை சுலபமாக வீட்டிலே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கொண்டைக்கடலை அடை செய்ய தேவையான பொருட்கள்.
கொண்டைக்கடலை -1கப்.
காய்ந்த மிளகாய்-4
பூண்டு-6
சீரகம்-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
வெங்காயம்-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
எண்ணெய்-தேவையானஅளவு.
கொண்டைக்கடலை அடை செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்துவிடுங்கள். இப்போது ஊறவைத்த கொண்டைக் கடலையை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் 4 காய்ந்த மிளகாய், பூண்டு 6, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அடை பதத்திற்கு மாவை அரைத்து எடுத்துக்கொண்டு வேண்டியை அளவு தண்ணீர்விட்டு கலக்கிக்கொள்ளவும். இப்போது தோசைக்கல்லில் மாவை அடைப்போல ஊற்றிக்கொண்டு மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி எண்ணெய் சிறிது விட்டு முறுவலாக வேகவிட்டு எடுக்கவும். சுவையான கொண்டைக்கடலை அடை தயார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கோவக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
கோவக்காய்-200 கிராம்.
நல்லெண்ணை – தேவையான அளவு.
தக்காளி-2
உப்பு- தேவையான அளவு.
பெருங்காயத்தூள்-3/4 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
காய்ந்த மிளகாய்-12
மிளகு-1 ½ தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
பூண்டு-12
பச்சை மிளகாய்-5
கருவேப்பிலை-சிறிதளவு.
தாளிக்க,
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
கோவக்காய் சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கோவக்காய் 200 கிராம் எடுத்துக்கொள்ளவும். அதை வட்டமாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்துவிட்டு கோவக்காயை அதில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இப்போது 2 தக்காளியை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும், தேவையான அளவு உப்பு, ¾ தேக்கரண்டி பெருங்காயத்தூள், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்துவிட்டு கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு 12 காய்ந்த மிளகாய், 1 ½ தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், 12 பூண்டு, 5 பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கி இதையும் மிக்ஸியில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது தாளிக்க 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து, கருவேப்பிலை சிறிதளவு பொரித்துவிட்டு இதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்துக்கிண்டவும். டேஸ்டியான கோவக்காய் சட்னி தயார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.