
சாமை இட்லி ஸாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – 1 கப்
உளுந்தம்பருப்பு – ¼ கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – இட்லி தட்டில் தடவ
ஸாண்ட்விச் பூரணம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
காரட் – ½ (துருவியது)
பீன்ஸ் – சில (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
தனியாதூள் – ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிது
செய்முறை:
சாமையும் உளுந்தும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் நன்கு அரைத்து, உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இது வழக்கமான இட்லி மாவைப் போலவே இருக்கும், சத்தும் அதிகம்.
பூரணம் தயாரிக்க: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம், காரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். மிளகுத்தூள், தனியாதூள், உப்பு சேர்த்து கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவவும். பாதி அளவு சாமை இட்லி மாவு ஊற்றி அதற்கு மேலே ஒரு ஸ்பூன் ஸ்டஃப்பிங் போட்டு மறுபடியும் சிறிது மாவு ஊற்றிமூடவும். இட்லி ஊறுகட்டிபோல ஸாண்ட்விச் ஆகும்.
இதனை இட்லி மேக்கரில் 10–15 நிமிடங்கள் ஊதிரமாக வேகவைக்கவும். வெந்ததும் சட்னியோடு அல்லது கேட்சப்போடு பரிமாறலாம். இது ஒரு ஹெல்தி, புரோட்டீன் மற்றும் நார்சத்து மிகுந்த ஸ்நாக். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது. தேங்காய் சட்னி, புதினா சட்னி, அல்லது தக்காளி சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.
சூரன் கட்லெட் (Elephant Yam Cutlet)
இது மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும் ஆன மாலை நேர ஸ்நாக்ஸ்,
தேவையான பொருட்கள்:
சூரன் / சேனைக்கிழங்கு – சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டியது _1 கப்
சின்னவெங்காயம் (நறுக்கியது)_ ¼ கப்
பச்சைமிளகாய் – 1 அல்லது 2 (நறுக்கியது) 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு (துருவியது) _ 1 டீஸ்பூன்
மல்லிஇலை_ சிறிது
மிளகுத்தூள்_ ½ டீஸ்பூன்
தனியாதூள்_ ½ டீஸ்பூன்
உப்பு _தேவையான அளவு
அரிசிமாவு _ 2-3 டீஸ்பூன்
எண்ணெய் சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை: சேனைக்கிழங்கை சுத்தம் செய்து துண்டுகள் செய்து ஒரு குக்கரில் வைத்து 2 விசில் வரும்வரை வேக வைக்கவும். (கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு தோல் சீவலாம்). வேக வைத்து குளிர்ந்த சேனையை நன்கு மசிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, மிளகுத்தூள், தனியாத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
கலவை ஒட்ட அரிசிமாவு சிறிது சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக எடுத்து தட்டி கட்லெட் வடிவத்தில் வெட்டி வைக்கவும். ஒரு தவா அல்லது பானில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். தயார் செய்த கட்லெட்டை அடுக்கி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக மிதமான தீயில் shallow fry செய்யவும். அதிக எண்ணெய் தேவையில்லை. அவை கிரிஸ்பியாகும் வரை சுடவும். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, அல்லது கெட்சப்புடன் பரிமாறலாம். சூரனில் நார்சத்து அதிகம். வயிறு நன்றாக இருக்கும்.