
தயிர் சாண்ட்விச் (Dahi Sandwich) மற்றும் மஞ்சள் பூசணி பொடி தூவல் கறி ரெசிபி.
தயிர் சாண்ட்விச் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கெட்டித் தயிர் ½ கப்
2.பிரட் ஸ்லைஸ் 6
3.துருவிய கேரட் ¼ கப்
4.பொடிசா நறுக்கிய வெள்ளரிக்காய் ¼ கப்
5.பொடிசா நறுக்கிய குடை மிளகாய் 2 டேபிள் ஸ்பூன்
6.உப்பு தேவைக்கேற்ப
7.கருப்பு மிளகுத் தூள் தேவைக்கேற்ப
8.சாட் மசாலா தூள் ½ டீஸ்பூன்
9.டோஸ்ட் பண்ண தேவையான அளவு நெய்
செய்முறை:
ஒரு பௌலில் தயிரை கொட்டி மிருதுவாகும் வரை அடித்துக் (whisk) கலக்கவும். அதனுடன் கேரட், குடை மிளகாய், வெள்ளரிக்காய், உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஒரு பிரட் ஸ்லைஸ் மீது கலவையை இடைவெளியின்றிப் பரத்தவும். அதன் மீது மற்றொரு பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும். ஒரு தோசைக் கல்லில் நெய் தடவி, சாண்ட்விச்சை வைத்து மிதமான தீயில்
பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்துப் பரிமாறவும். தக்காளி சாஸ் தொட்டு உட்கொள்ள, சுவையும் ஆரோக்கியமும் தரும் சாண்ட்விச்.
மஞ்சள் பூசணி பொடித்தூவல் கறி ரெசிபி
தோல் சீவி துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து வேகவைக்கவும். குழைவாக வேக விட வேண்டாம். மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வேகவைத்துள்ள பூசணிக் காயுடன் சேர்த்துக் கலந்துவிடவும். ஒரு தாளிப்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, ஜீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து பூசணிகாய் மீது கொட்டவும்.
மஞ்சள் பூசணி பொடித்தூவல் கறி ரெடி. சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து, மஞ்சள் பூசணி பொடித்தூவல் கறி தொட்டுக் கொண்டு சாப்பிட சுவை, மீண்டும் மீண்டும் போட்டு உண்ணத் தூண்டும்.